herzindagi
kerala meen pollichathu

Meen Pollichathu Recipe : கேரளாவின் பிரபலான மீன் பொளிச்சது… வீட்டிலேயே சமைக்கலாம்

வார விடுமுறையில் புதிய உணவுகளை ருசிக்க விரும்பும் நபர்கள் கேரளாவில் மிகவும் பிரபலமான மீன் பொளிச்சது செய்து ஒரு பிடி பிடிக்கலாம்.
Editorial
Updated:- 2024-02-23, 17:52 IST

ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்து பார்க்கப் போகும் உணவு கேரளாவில் மிகவும் பிரபலமான மீன் பொளிச்சது. இதை இரண்டு விதமாக செய்யலாம்.  மீனை வறுத்த பிறகு அதன் மீது மசாலா தடவி வாழை இலையில் வைத்து கட்டி வேக வைக்கலாம் அல்லது பேனில் போட்டு வறுக்கலாம் இதில் நாம் இரண்டாவது விதத்தை பின்பற்றி மீன் பொளிச்சது செய்யப் போகிறோம்.

மீன் பொளிச்சது செய்யத் தேவையானவை 

  • அயிலை மீன்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • எலுமிச்சை சாறு
  • தேங்காய் எண்ணெய்
  • தக்காளி 
  • சின்ன வெங்காயம் 
  • பூண்டு
  • வாழை இலை 

மேலும் படிங்க கேரளா ஸ்டைல் அலப்பி மீன் கறி செய்முறை

மீன் பொளிச்சது செய்முறை

  • அரை கிலோ அயிலை மீன் வாங்கி அதை நன்கு கழுவி அதன் உடலின் இருபுறமும் நான்கு இடங்களில் வெட்டுங்கள்.
  • இதை அப்படியே ஓரமாக வைத்துவிட்டு மசாலா தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் ஐந்து டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டேபிள் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
  • இவை அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்யவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல மாறவும். 
  • இதன் பிறகு மீனின் முழுவதிலும் மசாலாவை நன்கு தடவவும். வயிற்று பகுதியிலும் தடவுங்கள். அப்போது தான் சாப்பிடும் போது ருசியாக இருக்கும்.
  • மசாலாவை மீனின் மீது நன்கு கோட்டிங் செய்த பிறகு அரை மணி நேரம் குளிர்பதன பெட்டியில் வைக்கவும்.
  • இதன் பிறகு பேனில் மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு மீனை போட்டு வறுக்கவும். தேங்காய் எண்ணெய்யில் மீனை வறுப்பது நல்ல சுவையை தரும்.
  • மீனின் இருபுறமும் தலா மூன்று நிமிடங்களுக்கு வறுக்கவும். குறைந்த தீயில் மீனை வறுக்கவும்.
  • இப்போது மீன் பொளிச்சது செய்வதற்கான மசாலா தயாரிக்கலாம். 
  • மிக்ஸியில் 200 கிராம் தக்காளி, 50 கிராம் பூண்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • இதன் பிறகு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கறிவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து வறுக்கவும்.
  • உப்பு போட்ட பிறகு மிக்ஸியில் அரைத்த கலவையை இதில் சேர்க்கவும். இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் சீரக தூள், 100 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பச்சை வாடை போவதற்கு குறைந்தது 12 நிமிடங்களுக்கு சமைக்க வேண்டி இருக்கும். தற்போது எண்ணெய் பிரிந்து மசாலா கெட்டியாகி விடும்.
  • இப்போது வாழை இலையை தீயில் சில விநாடிகளுக்கு வாட்டவும். இதில் முதலில் மசாலா தடவி அதன் மீது வறுத்த மீனை வைத்து மீண்டும் மசாலா தடவி இலையை மடித்து வாழை நார் கொண்டு கட்டிவிடுங்கள். 
  • இறுதியாக பேனில் மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு மீன் கட்டிவைத்திருக்கும் வாழை இலையை இரு புறமும் தலா இரண்டு நிமிடங்களுக்கு வறுக்கவும்.

மேலும் படிங்க செட்டிநாடு ஸ்டைலில் இறால் மசாலா செய்முறை!

சுவையான கேரளா மீன் பொளிச்சது ரெடி.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com