
நாள் முழுவதும் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கான அடித்தளத்தை அமைப்பது காலை பொழுதில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் தான். உயர் இரத்த அழுத்தத்தை சரியாக நிர்வகிக்க, காலையில் அருந்தும் முதல் பானம் மிக முக்கியமானது.
மேலும் படிக்க: Weight loss tips: உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும் 5 இயற்கை பானங்கள்
சரியான காலை பானத்தை தேர்ந்தெடுப்பது இருதய செயல்பாட்டை சீராக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலின் அழுத்த சமநிலையை நிர்வகிக்கவும் உதவும். அதன்படி, உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நீங்கள் காலையில் அருந்த வேண்டிய 5 இயற்கை பானங்கள் என்னவென்று இதில் பார்க்கலாம்.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவது, அன்றைய தினத்தை தொடங்க எளிமையான வழிகளில் ஒன்றாகும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஒரு இயற்கையான அன்டிஆக்சிடென்சாக செயல்படுகிறது. இது இரத்த அழுத்தத்திற்கு காரணமான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை (Oxidative Stress) குறைக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சையின் சாறை பிழிந்து அருந்தலாம்.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பானங்களில் பீட்ரூட் சாறு ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பீட்ரூட்டில் உணவுக்கான நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இவை உடலில் நைட்ரிக் ஆக்ஸைடை உருவாக்க உதவுகின்றன. இந்த கலவை இரத்த நாளங்களை தளர்த்தவும், மென்மையான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதன்படி, அதிகாலையில் பீட்ரூட் சாறு அருந்துவது சிறந்த பலனை தரும்.
மேலும் படிக்க: அதிகமான புரதம், முழு ஆரோக்கியம்; இந்த வகையில் முட்டை சாப்பிட்டால் இரட்டை பலன்!
இளநீர் என்பது வெறும் புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமல்ல. இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. உயர் இரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதிக சோடியம். பொட்டாசியம், உடலில் உள்ள சோடியம் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. மிதமான அளவில் இளநீர் அருந்துவது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும், இதய துடிப்பை மேம்படுத்தவும் உதவும்.
கிரீன் டீ, லேசான காஃபின் ஊக்கத்துடன், அதிக அளவு கேடசின்கள் (Catechins) என்ற தாவர கலவைகளை வழங்குகிறது. இந்தக் கேடசின்கள் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு தொடர்புடையவை. இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதில் அதிக அளவில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை இருதயம் மற்றும் இரத்த நாளங்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. நெல்லிக்காய் சாறு இரத்த குழாய்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. காலையில் ஒரு சிறிய கிளாஸ் நெல்லிக்காய் சாறு அருந்துவது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்த இயற்கை பானங்கள் உதவியாக இருக்கும். இருப்பினும், மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளை நிறுத்துவது அல்லது மாற்றுவது கூடாது. உங்கள் மருத்துவரின் அறிவுரையின் பேரில் இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com