சமையல் என்பது ஒரு கலை. பெண்கள் என்ன தான் பார்த்து பார்த்து சமைத்தாலும் உப்போ? அல்லது காரமோ? அதிகமாகிவிட்டால் செய்த சமையலே பாழாகிவிடும். இதற்கு என்ன செய்யலாம்? என்ற தேடலில் நம்மில் பலர் நிச்சயம் ஈடுபட்டிருப்போம். இன்றைக்கு உணவில் அதிக காரம் அதிகமாகவிட்டால் சில டிப்ஸ்களை உங்களுக்காக இங்கே பகிர்கிறோம்..
சமையலில் காரம் அதிகமானால் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள்:
- சமையலில் காரம் சமையலில் காரம் அதிகமாவிட்டால் எவ்வித பதட்டமும் வேண்டாம். சிறிதளவு உப்பு மற்றும் புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிட்டால் போதும். காரம் கொஞ்சம் குறைவாகக் கூடும்.
- வீடுகளில் வைக்கும் சாம்பாரில் அதிக காரம் சேர்ந்துவிட்டால் கொஞ்சமாக பாசிப்பருப்பை வேகவைத்து சாம்பாருடன் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் சாம்பாரில் என்ன காய்கறிகள் அதிகம் சேர்த்துள்ளீர்களோ? அதை கொஞ்சமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னதாக ஒரு கடாயில் காய்கறிகளை வதக்கி காரம் அதிகம் உள்ள சாம்பாருடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- சில நேரங்களில் சாம்பாரில் உப்பு குறைவாக இருந்தாலும் காரம் அதிகமாக தெரியும். எனவே சரியான அளவிற்கு உப்வை சாம்பாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க:உணவில் காரம் அதிகமாகிவிட்டதா? சரி செய்வதற்கான எளிய டிப்ஸ்!
- சாம்பாரில் காரம் அதிகமாகிவிட்டால் தக்காளியை நன்கு வதக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் காரம் அதிகமானால் கொஞ்சமாக வெல்லம் அல்லது தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- சப்பாத்திக்கு வைக்கும் கிரேவியில் கொஞ்சம் காரம் அதிகமாகிவிட்டால் வெல்லம் அல்லது சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது தேங்காய் பால், நெய்,தயிர் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் கலந்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க:சமையலுக்குக் கூடுதல் ருசியைக் கொடுக்க சிம்பிள் டிப்ஸ்கள்!
- உருளைக்கிழங்கு, வாழைக்காய், சேனைக்கிழங்கு போன்ற பொரியலில் காரம் சேர்த்தால் தான் சுவையாக இருக்கும். ஒருவேளை பொரியலில் காரம் அதிகமாகும் பட்சத்தில் பொட்டுக்கடலையை நைஸாக அரைத்துக் கொண்டு லேசாக மேல் தூவ வேண்டும்.
- பிரியாணியில் காரம் அதிகமாகும் பட்சத்தில் எலுமிச்சை சாறு கொஞ்சமாக சேர்த்து கிளறிவிட்டால் போதும். காரம் சற்று குறைவாகக்கூடும்.
- தேங்காய் சாதம, எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் போன்றவற்றில் காரம் அதிகமாகும் பட்சத்தில் வடித்த சாதத்தைக் கொஞ்சமாக சேர்த்துக் கலந்துக் கொண்டால் போதும். நிச்சயம் உணவில் காரம் குறைவாகக்கூடுமாம்.
- கிரேவியில் காரம் அதிகமாகும் பட்சத்தில் உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். அல்லது காரத்தைக் குறைப்பதற்கு தேங்காய் மற்றும் கசகசா போன்றவற்றை அரைத்து கிரேவியில் சேர்த்து கொதிக்க விட்டால் போதும். காரம் கொஞ்சம் குறையக்கூடும்.
சமைக்கும் உணவில் காரம் அதிகமாகும் பட்சத்தில் இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றி காரத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய்ய பழகுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation