உணவில் காரம் அதிகமாகிவிட்டதா? சரி செய்வதற்கான எளிய டிப்ஸ்!

 நீங்கள் உணவுப்பொருள்களில் உள்ள  காரத்தைக் குறைக்க விரும்பினால் கிரேவியில் சிறிதளவு சர்க்கரை அல்லது கெட்ச் அப்பைச் சேர்க்க வேண்டும்.

tips to reduce spice food

சமையல் என்பது ஒரு கலை. இன்றைக்கு ஆண்களும், பெண்களும் சமையல் கலையில் தேர்ந்தவர்களாக இருந்தாலும் பல நேரங்களில் சிறிய சிறிய தவறுகள் வரத்தான் செய்யும். நாம் சமைக்கும் கிரேவி அல்லது குழம்புகளில் சில நேரங்களில் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிடும். இவ்வாறு உணவுப் பொருட்களில் அதிகரித்த காரத்தை சில எளிய டிப்ஸ்களைப் பயன்படுத்தி சரி செய்து விடலாம்.

அப்புறம் என்ன? இனி நீங்கள் வைக்கும் குழம்புகளில் காரம் அதிகமானால் கவலைப்படாமல் கீழ்க்கூறக்கூடிய இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி உணவுகளில் அதிகமாகும் காரத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இதோ என்னென்ன என்பது? குறித்து முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

avoid spice

உணவில் காரத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள்:

  • தயிர்:நீங்கள் சமைக்கும் உணவுகளில் காரம் அதிகமாக பட்சத்தில் எவ்வித பதற்றமும் இல்லாமல் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். அப்படியும் காரம் குறையவில்லையென்றாலும் சுவை மாறாத அளவிற்குக் கொஞ்சம் தயிர் சேர்க்கவும். இது உணவில் உள்ள காரத்தைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.
  • எலுமிச்சை சாறு:சமையலில் அதிகரித்த காரத் தன்மையைக் குறைக்க வேண்டும் என்றால், குழம்பு அல்லது கிரேவிகளில் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சிட்ரஸ் பழச்சாறு அதிகரித்த காரத்தன்மையைக் குறைக்க உதவும். இதோடு அரிசி மாவு அல்லது கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து உபயோகிக்கும் போது, உணவுப் பொருட்களில் உள்ள அதிகப்படியான மசாலாவை உறிஞ்சுவதற்கு உதவியாக உள்ளது.
  • காய்கறிகளைச் சேர்த்தல்: உணவில் காரம் அதிகமாகும் போது அதைக் குறைப்பதற்கு கேரட், வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளைப் பொடியாக நறுக்கி குழம்புகளுடன் சேர்க்கவும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் குழம்பில் உள்ள காரத்தன்மையைக் குறைக்க உதவியாக இருக்கும்.
  • வேர்க்கடலை பேஸ்ட்: காரக்குழம்பு, சாம்பார், மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி போன்றவற்றில் காரம் அதிகமாகும் போது கவலை வேண்டாம். இதை சரி செய்வதற்கு முதலில் நீங்கள் வறுத்த வேர்க்கடலையை பேஸ்ட் போன்று அரைத்து அதில் சேர்க்கவும். இது குழம்புகளில் இருக்கும் காரத்தன்மையைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும். இது போன்று முந்திரியையும் நீங்கள் பேஸ்ட் போன்று அரைத்து உபயோகிக்கலாம்.
  • சர்க்கரை அல்லத கெட்ச் அப்: சிக்கன் கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா உள்ளிட்ட பல்வேறு குழம்புகளை வீட்டில் செய்து பார்க்க முயற்சிக்கும் போது ஒன்று காரம் அதிகமாகும் அல்லது உப்பு அதிகமாகும். நீங்கள் காரத்தைக் குறைக்க விரும்பினால் கிரேவியில் சிறிதளவு சர்க்கரை அல்லது கெட்ச் அப்பைச் சேர்க்க வேண்டும். இதில் உணவுப்பொருட்களில் உள்ள காரத்தன்மையைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க:காலையில் குடிக்கப்படும் ஒரு கப் காபியில் இருக்கும் மாயாஜால நன்மைகள்!!

spicy

இதுபோன்ற சின்ன சின்ன சமையல் டிப்ஸ்களைப் பயன்படுத்தி உணவுப்பொருட்களில் அதிகமாகும் காரத்தை மிகவும் ஈஸியாக குறைக்க உதவியாக இருக்கும். இனி நீங்களும் உங்களது வீடுகளில் ட்ரை பண்ண முயற்சி செய்யுங்கள்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP