cooking tips for nice food

சமையலுக்குக் கூடுதல் ருசியைக் கொடுக்க சிம்பிள் டிப்ஸ்கள்!

<span style="text-align: justify;">சேனைக்கிழங்கை சமைக்கும் போது, புளிநீரில் வேக வைத்தால் சாப்பிடும் போது நாக்கு அரிக்காமல் இருக்கும்.</span>
Editorial
Updated:- 2024-05-30, 19:05 IST

சமையல் என்பது ஒரு கலை. அதை அழகாக மாற்றுவதும் ருசிக்கவே முடியாத அளவிற்கு அதன் சுவையைக் கெடுப்பதும் சமையல் கலைஞர்களின் கையில் தான் உள்ளது. குறிப்பாக வீட்டில் உள்ள பெண்கள் பார்த்துப் பார்த்து சமைத்தாலும் சில நேரங்களில் ருசியே இருக்காது.ஏதாவது ஒரு நாளில் ருசியாக சமைத்தாலும் அதன் சுவையை மேலும் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதோ உங்கள் உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்க சில எளிய சமையல் குறிப்புகள் இங்கே உங்களுக்காக.

cooking ()

சமையலை ருசியாக்கும் சிம்பிள் டிப்ஸ்கள்:

  • தக்காளி, லெமன், தயிர் போன்ற கலவை சாதம், பிரியாணி போன்வற்றைக் குக்கரில் செய்யும் போது மூடியைத் திறந்ததுமே சிறிது எலுமிச்சைச் சாறை விட்டு கிளறவும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது சாதம் கொழந்தைவிடாமல் உதிரி உதிரியாக வரும்.
  • வாழைப்பூவைப் பிரித்தெடுத்து வைத்தால் அது கருமை நிறத்திற்கு வரக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், வாழைப்பூவை எப்போதும் நறுக்கியவுடன் உப்பு, மஞ்சள் பொடி கரைத்த நீரில் ஊறப் போட வேண்டும். இவ்வாறு செய்யும் போது பூ கறுக்காமல் இருக்கும்.
  • கோடை விடுமுறையில் கட்டாயம் உங்களது குழந்தைகளுக்கு ஒருமுறையாவது பக்கோடா செய்து கொடுத்திருப்போம். சில நேரங்களில் மொறு மொறுவென்று இருக்கும். சில நேரங்களில் நமத்துப்போயிருக்கும். இதை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால், பக்கோடா செய்யும் போது வேர்ககடலையை பொடி செய்து கடலைமாவில் கலந்துக்கொள்ளும் போது மொறு மொறுன்னு இருக்கும்.
  • சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு சாப்பிட்டால் நாக்கு அரிக்கும்.  ஆனாலும் ஃப்ரை செய்து சாப்பிடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் சேனைக்கிழங்கை சமைக்கும் போது, புளிநீரில் வேக வைத்தால் சாப்பிடும் போது நாக்கு அரிக்காமல் இருக்கும்.
  • குழந்தைகளுக்கு மதிய உணவிற்காகத் தக்காளி சாதம் செய்துக் கொடுக்க வேண்டும் என்று நினைப்போம். சில நேரங்களில் நாமே சாப்பிட முடியாத அளவிற்கு கொடுமையாகிவிடும். இதன் ருசியை மேலும் அதிகமாக்க வேண்டும் என்றால், தக்காளி சாதம் செய்யும் போது சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி போன்றவற்றை அரைத்து ஊற்றினால் போதும். தக்காளி சாதம் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். 

tasty foods

  • அப்பளம் பொரித்து சாப்பிடுவதே மொறு மொறு சுவைக்காகத் தான். ஒருவேளை நமத்துவிடும் போது அதன் சுவை முற்றிலும் மாறிவிடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், அப்பளத்தின் இருபுறமும் லேசாக எண்ணெய் தடவி நெருப்பில் சுட்டால் பொரித்தது போலவே இருக்கும். இதுபோன்ற முறைகளைப் பின்பற்றி நீங்கள் சமைக்கும் உணவுகளுக்குக் கொஞ்சம் கூடுதல் சுவையைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

 Image source - Google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com