Chia seeds: சியா விதைகள், சிறிய அளவிலான விதையாக இருந்தாலும், ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாக இருக்கின்றன. நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்துள்ளன.
மேலும் படிக்க: ஸ்டார் ஹோட்டல் போன்று வீடு முழுவதும் மனம் வீச வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தருவதால், உடல் எடையைக் கட்டுப்படுத்த இது ஒரு சிறந்த உணவாகும். இது மட்டுமின்றி, இது நமக்கு ஆற்றலை வழங்கி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளக்கூடிய இந்த சியா விதைகள், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும்.
இந்த ஊட்டச்சத்து நிறைந்த சியா விதைகளை உங்கள் வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். இதற்காக நீங்கள் மேற்கொள்ள வேண்டிய ஐந்து வழிமுறைகளை இதில் பார்ப்போம்.
கீழே வடிகால் துளைகள் உள்ள ஒரு தொட்டியை தேர்ந்தெடுக்கவும். அல்லது உங்கள் தோட்டத்தில் நன்கு வடிகால் வசதியுள்ள ஒரு பகுதியைத் தயார் செய்யவும். சியா விதைகளுக்கு, வடிகால் வசதி மிகவும் முக்கியம் ஆகும்.
சியா விதைகளை நேரடியாக மண்ணில் தூவி, அதன் மேல் சுமார் ¼ அங்குல அளவிற்கு மெல்லிய மண் அடுக்கால் மூடவும். விதைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், ஆழமாகப் புதைக்க வேண்டாம்.
மேலும் படிக்க: இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க... உங்க வீட்டு ரோஜா செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கும்!
சியா செடிகள் முழு சூரிய ஒளியில் செழித்து வளரும். எனவே, உங்கள் தோட்டத்தில் அல்லது பால்கனியில் அதிக சூரிய ஒளி கிடைக்கும் இடத்தை இதற்கு தேர்ந்தெடுக்கவும். குறிப்பாக, ஆரம்ப வளர்ச்சி காலத்தில், மண்ணை ஈரமாக வைத்திருக்க தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
செடிகள் வளர்ந்து சிறிது உயரமான பிறகு, அவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட செடிகள் நெருக்கமாக இருந்தால், சிலவற்றை அகற்றி, மற்ற செடிகள் நன்கு வளர போதுமான இடைவெளி கொடுங்கள். இது ஒவ்வொரு செடிக்கும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைப்பதை உறுதி செய்யும்.
சியா செடிகளை சில மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்யலாம். சியா காய்கள் பழுப்பு நிறமாக மாறி, காய்ந்த பிறகு நீங்கள் அவற்றை அறுவடை செய்யலாம். சியா விதைகளை வளர்ப்பதில் ஒரு முக்கியமான குறிப்பு, பொறுமை ஆகும். இந்த விதைகள் முளைக்க சிறிது நேரம் ஆகலாம். எனவே, தொடர்ந்து கவனித்து வாருங்கள்.
இந்த எளிய குறிப்புகளை கவனமாக பின்பற்றுவதன் மூலம் உங்கள் வீட்டிலேயே சியா விதைகளை எளிதாக பெற முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com