herzindagi
image

மழைக்காலத்தின் போது நோய்த் தொற்றுகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வதற்கான 5 முக்கிய குறிப்புகள்

இந்த மழைக்காலத்தில் நோய்த் தொற்றுகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வதற்கான 5 முக்கிய குறிப்புகளை இதில் பார்க்கலாம். இதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும்.
Editorial
Updated:- 2025-10-21, 14:18 IST

கோடை வெப்பத்தில் இருந்து குளிர்ச்சி அளிக்கும் சூழலை மழைக்காலம் தருகிறது. ஆனால், இந்த இதமான பருவம் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சற்று கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். டெங்கு, மலேரியா, டைஃபாய்டு போன்ற நோய்கள் அதிகமாக பரவும் நேரமும் இது தான். எனவே, இந்தப் பருவத்தில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும் சில அத்தியாவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இதில் காணலாம்.

மேலும் படிக்க: மழைக்காலத்தில் அதிகரிக்கும் தொற்று நோய்கள்; உங்களை தற்காத்துக் கொள்ள சில எளிய வழிகள்

 

உணவுகளில் கவனம்:

 

சாலையோர கடைகளில் இருக்கும் உணவுகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இவற்றில் இருந்து உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. பெரும்பாலும், இந்த உணவுகள் சுகாதாரமாக இல்லாமல் இருக்கலாம். மேலும், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள உணவுகள், ஈரப்பதம் அல்லது அதிக வெப்பம் காரணமாக கிருமிகள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றின் கூடாரம் போன்று இருக்கும்.

 

எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்கவும்:

 

அதிக ஈரப்பதம் காரணமாக, நமது செரிமான செயல்பாடு சற்று குறையும். இதனால் வயிறு உப்புசம் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த நேரத்தில், சமோசா, பக்கோடா போன்ற எண்ணெய்யில் பொரித்த உணவுகளை சாப்பிடுவது, ஏற்கனவே பலவீனமடைந்துள்ள உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கலாம்.

Oil fried foods

 

நீர்ச்சத்தில் கவனமாக இருக்கவும்:

 

மழைக்காலமாக இருந்தாலும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது நச்சுகளை வெளியேற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும். ஆனால், பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட (Purified) நீரை மட்டுமே குடிக்கவும். ஏனெனில், காலரா மற்றும் டைஃபாய்டு போன்ற நீர் மூலம் பரவும் நோய்கள் மழைக்காலத்தில் அதிகமாக இருக்கும். தேவைப்பட்டால் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்கலாம். குழாய் நீரை நேரடியாக அருந்துவதை தவிர்க்கவும்.

மேலும் படிக்க: இளம் தலைமுறையினரிடம் அதிகரிக்கும் மாரடைப்பு அபாயம்; இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய வழிகள் இதோ

 

தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்:

 

உணவு உண்பதற்கு முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். உடலில் ஏதேனும் காயங்கள் இருந்தால், அவற்றில் கிருமி தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் ஷூ அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். மேலும், சருமம் மற்றும் கூந்தலில் அதிகம் எண்ணெய் சேருவதை தடுக்க வேண்டும்.

Hand washing

 

கொசுக்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கவும்:

 

மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொசுக்கடியின் வாய்ப்பை குறைக்க முழுக்கை ஆடைகளை அணியுங்கள். மேலும், உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள். குப்பைக் கூடையை உலர்ந்ததாகவும், மூடப்பட்டதாகவும் வைக்க வேண்டும். உங்கள் இருப்பிடத்தில் தண்ணீர் தேங்க அனுமதிக்காதீர்கள். ஏனெனில், தேங்கி நிற்கும் நீர், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகும்.

 

இவற்றை சரியான முறையில் பின்பற்றுவதன் மூலம் இந்த மழைக்காலத்தில் நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com