Kodi Vepudu Recipe : சிக்கன் கோடி வேப்புடு ருசிக்க தயாரா ?

ஆந்திராவில் மிகப் பிரபலமான சிக்கன் கோடி வேப்புடு செய்வது எப்படி ? வாங்க பார்க்கலாம்

Main kv
Main kv

ஆந்திரா ஸ்பெஷல் ரெசியில் ஸ்டைலான சிக்கன் ஃப்ரை பற்றி எழுதியுள்ளோம். சிக்கனை சமைத்து ருசிக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன. இதில் நாங்கள் ஆந்திரா ஸ்டைல் சமையல் பற்றி எழுதுவதற்கு முக்கிய காரணம். சிக்கனை காரசாரமாக ருசிக்க இது சிறந்த வழி. இந்தக் கட்டுரையில் ஆந்திராவில் மிகப் பிரபலமான சிக்கன் கோடி வேப்புடு செய்முறையைப் பகிர்ந்துள்ளோம்.

 kv

கோடி வேப்புடுவுக்கு தேவையான பொருட்கள்

  • அரை கிலோ சிக்கன்
  • வெங்காயம்
  • தக்காளி
  • இஞ்சி-பூண்டு விழுது
  • தக்காளி
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • தனியா
  • கறிவேப்பிலை
  • முந்திரி பருப்பு
  • மிளகாய் தூள்
  • லவங்கம்
  • பட்டை
  • ஏலக்காய்

கோடி வேப்புடு செய்முறை

  • ஒரு பேனில் ரிஃபைண்ட் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கொஞ்சம் பட்டை, லவங்கம் , ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்
  • தற்போது இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை நுறுக்கி எண்ணெய்யில் போடவும்
  • வெங்காயம் தங்க பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும்
  • ஒரு மீடியம் சைஸ் தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
  • பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்
  • அடுத்ததாகத் தேவையான அளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  • தற்போது 500 கிராம் சிக்கனை பீஸ் பீஸாக வெட்டி பேனில் போட்டு அனைத்தையும் கலந்து வறுப்பதை தொடரவும்
  • ஒரு ஸ்பூன் தனியா பவுடரும் ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூளும் சேர்த்துக் கொள்ளுங்கள்
  • இரண்டு நிமிடங்களுக்கு கிண்டி விட்டு அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள்
  • மற்றொரு பத்திரத்தில் மூன்று ஸ்பூன் ரிஃபைண்ட் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு சிக்கனை அதில் போட்டு பொறிக்க வேண்டும்
  • சிக்கனை வேக வைக்க சிறிதளவு தண்ணீரும் சேருங்கள்
  • அடுத்ததாகச் சிக்கனில் நான்கு முந்திரி பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்க்கவும்
  • எண்ணெய்யில் சிக்கன் நன்கு வறுபட்டால் சுவையான கோடி வேப்புடு தயார்.

இது போன்ற கட்டுரைகளுகு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP