herzindagi
image

ஐதராபாத் பகாரா ரைஸ் செய்ய தெரியுமா ? பிரியாணியை விட செம்ம ருசி

ஐதராபாத்தில் மிகவும் பிரபலமான பகாரா ரைஸ் செய்முறையை இந்தப் பதிவில் பார்க்கலாம். பிரியாணிக்கு இணையான சுவையில் பகாரா ரைஸ் இருக்கும். அரை மணி நேரம் இருந்தால் போதும் பகாரா ரைஸ் ருசிக்கலாம்.
Editorial
Updated:- 2024-12-18, 21:39 IST

தெலுங்கானாவில் காது குத்து, கல்யாணம், விருந்து உட்பட எந்த சுப நிகழ்வாக இருந்தாலும் பகாரா பரிமாறப்படும். தமிழகத்தில் குஸ்கா எப்படியோ தெலுங்கானாவில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் பகாரா சாதம் உள்ளது. இதை வெள்ளை பிரியாணி என்றழைக்கின்றனர். ஏனெனில் இது பிரியாணியின் சுவையில் தெரியும். செய்முறையும் ஏறக்குறைய ஒன்றே. குழந்தைகளுக்கும், அலுவலகம் செல்வோருக்கும் பகாரா ரைஸுடன் சிக்கன், மட்டன் அல்லது முட்டை கறி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வதற்கு புதினா, கொத்தமல்லி மிக அவசியம்.

bagara rice recipe

பகாரா ரைஸ் செய்ய தேவையானவை

பாஸ்மதி அரிசி
வெங்காயம்
தக்காளி
நெய்
நல்லெண்ணெய்
தண்ணீர்
உப்பு
இலவங்கம்
ஏலக்காய்
கிராம்பு
அன்னாசி பூ
மராட்டி மொக்கு
ஷாஹி ஜீரா
பிரியாணி இலை

மேலும் படிங்க மலபார் ஸ்பெஷல் அரிசி பத்திரி ரெசிபி; ஒரு கப் அரிசி மாவு போதும்

பகாரா ரைஸ் செய்முறை

  • குக்கரில் மூன்று ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். இதன் பிறகு இரண்டு இலவங்கம், 4 கிராம்பு, ஒரு அன்னாசி பூ, 2 மராட்டி மொக்கு, கொஞ்சம் ஷாகி ஹீரா, 2 பிரியாணி இலை போட்டு வறுக்கவும். ஆரம்பத்திலேயே வாசனை கமகமனு வரும்.
  • அடுத்ததாக இரண்டு பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி போட்டு வதக்கவும். வெங்காயம் பொன் நிறத்திற்கு மாறும் வரை வதக்குங்கள்.
  • அதன் பிறகு நான்கு பச்சை மிளகாயை நறுக்கி சேர்க்கவும். முன்னதாக ஒரு கப் பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் தண்ணீர் ஊறவிடுங்கள்.
  • பாஸ்மதி அரிசியை எப்போது பயன்படுத்தினாலும் 20-30 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊறவைப்பது நல்லது.
  • ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு ஒரு மீடியம் சைஸ் தக்காளியை நறுக்கி சேருங்கள். தக்காளி சேர்ப்பது கட்டாயமில்லை.
  • தலா ஒரு கட்டு புதினா, கொத்தமல்லி போடுங்கள். பகாரா சாதத்தின் சுவையை நிர்ணயிப்பது இவை இரண்டுமே. போட்ட சில விநாடிகளிலேயே சுருங்கிவிடும்.
  • தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கப் பாஸ்மதி அரிசி சேர்க்கவும். இதற்கு ஒன்றரை கப் தண்ணீர் என்பது அளவு.
  • அரிசியை போட்ட பிறகு அனைத்தையும் கலந்துவிட்டு குக்கரை மூடி மிதமான சூட்டில் வைத்து 4 விசில் அடிக்கும் வரை காத்திருங்கள். சுட சுட சாப்பிட்டு பாருங்கள். இத்தனை நாட்கள் ஏன் சாப்பிடவில்லை என வறுத்தப்படுவீர்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com