
தூக்கம் என்பது ஆரோக்கியமான வாழ்க்கையின் அஸ்திவாரம் போன்றதாகும். நம் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த இரவு நேர ஓய்வை நாம் பெரும்பாலும் அலட்சியப்படுத்துகிறோம்.
மேலும் படிக்க: தூக்கமின்மைக்கு தீர்வு: இந்த வைட்டமின் குறைபாட்டை சரிசெய்வது எப்படி?
ஆனால், தினமும் இரவு 8 மணி நேரம் உறங்குவது ஏன் அவசியம், அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். இதன் மூலம் உறக்கத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
சரியான உறக்கம் இல்லையென்றால் ஆற்றல், மூளை செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உணர்ச்சி ஸ்திரத்தன்மை போன்ற அனைத்தும் பாதிக்கப்படும். போதுமான உறக்கம் இல்லாவிட்டால் சோர்வு, கவனக் குறைவு மற்றும் பல உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

தினமும் தொடர்ந்து 8 மணி நேரம் உறங்குவது என்பது நம்முடைய உடல் மற்றும் மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த முழுமையான 8 மணி நேர உறக்கம், நமது உடலை சீர்ப்படுத்தவும், மீட்டெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் வழிவகுக்கிறது. நீங்கள் ஒரு மணி நேரம் குறைவாக உறங்கினாலும் கூட, அதன் விளைவுகள் உடனடியாக தெரியும்.
இரவில் 8 மணி நேரம் தூங்கினால், அடுத்த நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட முடியும். உறக்கம் என்பது நினைவாற்றல், படைப்பாற்றல் மற்றும் சிக்கலை தீர்க்கும் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இதனால் உங்கள் மூளை அதிக திறனுடன் செயல்படுகிறது.
மேலும் படிக்க: கண் பார்வையை பாதிக்கும் 5 பழக்கங்கள்; இந்த தவறுகளை மட்டும் பண்ணாதீங்க மக்களே
ஆழ்ந்த உறக்கத்தின் போது, நம் உடல் அதிக அளவில் சைட்டோகைன்கள் மற்றும் அன்டிபாடிகளை உருவாக்குகிறது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன. உறக்கம், மன அழுத்த ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் மனநிலை சீராகி உணர்ச்சி சமநிலையுடன் காணப்படுவீர்கள்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்வோர் போதுமான உறக்கம் பெறும் போது, ஒருங்கிணைந்த ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சி பெறுவதாக கூறுகின்றனர். இது உடற்பயிற்சியின் முழு பலனையும் பெற உதவும். போதுமான உறக்கம் இன்சுலின் ஒழுங்குமுறைக்கு உதவுகிறது. மேலும், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான ஆர்வத்தை குறைக்கிறது. இது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க மிகவும் அவசியம் ஆகும்.
இத்தகைய ஆரோக்கிய நன்மைகள் அனைத்தையும் நாம் அவசியம் பெற வேண்டுமானால், நாள்தோறும் 8 மணி நேர தூக்கத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் நம்முடைய ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com