herzindagi
image

மலபார் ஸ்பெஷல் அரிசி பத்திரி ரெசிபி; ஒரு கப் அரிசி மாவு போதும்

புதுவிதமான சப்பாத்தி அல்லது ரொட்டி ருசிக்க விரும்புவோர் கிச்சனில் ஒரு கப் அரிசி மாவை தேடுங்கள். அதை வைத்து மலபார் ஸ்பெஷல் அரிசி பத்திரி எப்படி செய்வது என பார்க்கலாம். அரிசி பத்திரி தனக்கு பிடித்தமான உணவு என நடிகர் துல்கர் சல்மானே சொல்லி இருக்கிறார்.
Editorial
Updated:- 2024-12-14, 17:02 IST

கேரளாவின் பாரம்பரிய உணவுகளில் மலபார் அரிசி பத்திரியும் ஒன்று. இதை அரிசி மாவு ரொட்டி, அரிசி மாவு சப்பாத்தி, அரி பத்திரி, மலபார் பத்திரி ஆகிய பெயர்களில் அழைக்கின்றனர். இதை நாம் அரிசி மாவில் தயாரித்த சப்பாத்தி என புரிந்து கொள்ளலாம். சப்பாத்தி என்றாலே கனமாக இருக்கும். இந்த சப்பாத்தி அப்படியல்ல... அரிசி மாவில் தயாரிப்பதால் மிகவும் மென்மையானது. காலை மற்றும் இரவு வேளைகளில் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ரமலான் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் இதை தயாரிப்பது உண்டு. இதன் செய்முறை மிகவும் எளிதானது. வாருங்கள் அரிசி பத்திரி எனும் அரிசி மாவில் சப்பாத்தி செய்முறையை பார்க்கலாம்.

rice pathiri

மலபார் அரிசி பத்திரி செய்ய தேவையானவை

  • அரிசி மாவு
  • தண்ணீர்
  • உப்பு
  • தேங்காய் எண்ணெய்

மேலும் படிங்க கேரளா தலச்சேரி சிக்கன் பிரியாணி செய்முறை

மலபார் அரிசி பத்திரி செய்முறை

  • பேனில் ஒரு கப் அரிசி மாவு எடுத்து 3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுக்கவும். அதன் பிறகு தனியாக வைத்துவிடுங்கள்.
  • ஒரு கப் அரிசி மாவிற்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் என்ற அளவில் எடுத்து பாத்திரத்தில் நன்கு கொதிக்கவிடுங்கள்.
  • தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி வறுத்த அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்.
  • இதோடு தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள்.
  • அரிசி மாவு தண்ணீரை உறிஞ்சியவுடன் அடுப்பில் இருந்து எடுத்துவிடுங்கள்.
  • அரிசி பத்திரியை சூட்டுடன் பிசையது நல்லது. சப்பாத்தி மாவு எப்படி பிசைவோமோ... அப்படியே செய்யுங்கள்.
  • சூட்டிலேயே பிசைந்தால் தான் அரிசி பத்திரி மென்மையாக வரும். சப்பாத்தி சுடும் சைஸிற்கு மாவு எடுத்து உருண்டை பிடித்து கட்டையால் தேய்க்கவும்.
  • தோசைக்கல்லில் எண்ணெய் எதுவும் ஊற்ற தேவையில்லை. உருட்டிய மாவை போட்டு இருபுறமும் வேகவிடுங்கள்.
  • மிதமான தீயில் அரிசி பத்திரி கொஞ்சம் உப்பி வந்தால் போதுமானது. சப்பாத்தி போல ஆங்காங்கே கருப்பாக வரத் தேவையில்லை.
  • வெஜிடபிள் குருமா, உருளைக்கிழங்கு மசாலாவுடன் தொட்டு சாப்பிடுவதற்கு அரிசி பத்திரி எனும் அரிசி மாவு சப்பாத்தி நன்றாக இருக்கும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com