
இன்றைய சூழலில் பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். அதற்கான காரணம் மற்றும் தீர்வு குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்தும் 7 பழங்கள்; மிஸ் பண்ணாதீங்க மக்களே
நல்ல உடல்நலத்திற்கு போதுமான தூக்கம் அவசியம். ஆனால், பலர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கம், மன அழுத்தம் மற்றும் உடல் உழைப்பின்மை போன்ற காரணிகளுடன், சில வைட்டமின் குறைபாடுகளும் தூக்கமின்மையை ஏற்படுத்துகின்றன. வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு தூக்கமின்மைக்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன.
வைட்டமின் டி, எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், செரோடோனின் எனப்படும் ஹார்மோன் உற்பத்திக்கும் உதவுகிறது. இந்த ஹார்மோன் தூக்கம், மனநிலை மற்றும் பதற்றம் ஆகியவற்றை சீராக்க உதவுகிறது. வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்போது, செரோடோனின் அளவு குறைந்து தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது.

இதேபோல், வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு அவசியம். வைட்டமின் பி12 குறைவாக இருக்கும்போது, தூக்கமின்மை மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படலாம். இந்த வைட்டமின் குறைபாடு, சோர்வு, அமைதியின்மை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இவை அனைத்தும் தூக்கத்தை பாதிக்கின்றன.
மேலும் படிக்க: ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும்? அதிக உப்பு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
வைட்டமின் டி குறைபாட்டை சரிசெய்ய, தினமும் 15 - 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது நல்லது. தேவைப்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சரியான மருத்துவரின் தகுந்த ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி12-க்கு, முட்டை, கோழி இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற அசைவ உணவுகள் சிறந்ததாகும். சைவ உணவு உண்பவர்கள், போதுமான அளவு வைட்டமின் பி12 கிடைப்பதை உறுதி செய்ய, மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் பி12 மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
தொடர்ந்து தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகி இரத்த பரிசோதனை செய்வது நல்லதாகும். வைட்டமின் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சரி செய்வதன் மூலம், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம். அத்துடன், சரியான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com