herzindagi
image

கால் வலிக்குத் தீர்வு காணும் பிரண்டை வற்றல்; வீட்டிலேயே இப்படி செய்துப்பாருங்க!

பிரண்டையை அதிகளவில் உணவு முறையில சேர்த்துக் கொள்ளும் போது, முழங்கால் வலிக்குத் தீர்வு காண முடியும்.
Editorial
Updated:- 2025-11-04, 23:14 IST


இந்தியா மற்றும் இலங்கையில் அதிகளவில் மனிதர்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத இடங்கள் மற்றும் உயிர்வேலிகளில் அதிகளவில் வளர்ந்திருப்பது தான் பிரண்டை. ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, புளிப்புப் பிரண்டை, இனிப்புப் பிரண்டை மற்றும் சாதாரண பிரண்டை போன்ற பல வகைகளைக் கொண்டது பிரண்டை. இதற்கு வஜ்ஜிர வல்லி என்ற பெயரும் உண்டு.

நம்முடைய முன்னோர்கள் 60 வயதிற்கு மேலாகியும் கம்பு ஊன்றி நடக்காததற்கு பிரண்டை முக்கிய காரணமாக அமைகிறது. காடுகளுக்கு வேலை செய்யும் போது அங்கு கிடைக்கும் பிரண்டை தண்டுகளைப் பறித்து வந்து துவையல், குழம்பு போன்ற பல வகைகளில் செய்து சாப்பிடுவார்கள். இதனால் தான் எவ்வித உடல் நல பிரச்சனைகளையும் இன்றி வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறைகளுக்கு பிரண்டை என்றால் என்னவென்றே தெரியாது. ஒருவேளை வீடுகளில் செய்துக் கொடுத்தாலும் அதன் சுவை பலருக்கும் பிடிக்காது. இந்த நேரத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பிரண்டை வைத்து மொறு மொறுவென்று வற்றல் தயாரித்து சாப்பிடலாம். இதோ எப்படி செய்வது? இதன் மூலம் என்னென்ன பயன்கள்? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு சிறுதானியங்களை ட்ரை பண்ணுங்க

பிரண்டை வற்றல் செய்யும் முறை:

  • பிரண்டையை பறிந்து வந்து அதில் உள்ள தண்டு பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் பிரண்டையை தண்ணீரால் நன்கு சுத்தம் செய்து நிழலில் காய வைக்கவும்.
  • இதையடுத்து உப்பு மற்றும் மோர் சேர்த்து ஒரு வார காலத்திற்கு நிழலில் காய வைத்துக் கொள்ளவும்.
  • நன்கு காய்ந்தவுடன் ஒரு டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும் போது எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்குப் பிடித்தவாறு செய்து சாப்பிடும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கொஞ்சமாவது கிடைக்கப்பெறும்.

 

பிரண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • பிரண்டை அடிக்கடி உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது முழங்கால் வீக்கம், வலி மற்றும் சுளுக்கு போன்றவற்றிற்குத் தீர்வு காண முடியும்.
  • உடலுக்கு சுறுசுறுப்பை அளித்து நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதற்கு உதவியாக உள்ளது.
  • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய இடுப்பு வலி, வயிற்று வலி போன்றவற்றிற்கு தீர்வு காண வேண்டும் என்றால் கால்சியம் சத்துக்கள் நிறைந்த பிரண்டையை உணவு முறைகளில் சேர்த்துக் கொள்ளவும்.

 Image source - freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com