herzindagi
image

Hair Fall in Winter: குளிர்காலத்தில் தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? முறையாக பராமரிக்கும் முறை இதோ!

குளிர்காலத்தில் தலைமுடியை முறையாக கவனிக்காவிடில் முடி உதிர்தல் பிரச்சனை அதிகளவில் ஏற்படும். இவற்றிற்குத் தீர்வு காண வேண்டும் என்று நினைத்தால் வீட்டில் உள்ள சில பொருட்களைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் தயாரித்து உபயோகிக்கலாம்.
Editorial
Updated:- 2025-12-17, 23:17 IST


தலைமுடியை முறையாக பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் பெரும் சவாலான விஷயம். மற்ற பருவ காலங்களை ஒப்பிடுவதை விட குளிர்காலத்தில் நம் தலைமுடியில் நிறைய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். குறிப்பாக முடிகள் வறண்டு விடுவதோடு, தலைமுடி வேர்வரை மந்தமாகவும், உயிரற்றதாகவும் இருக்கும். மேலும் குளிர்ச்சியான நேரத்தில் தலைக்கு அடிக்கடி குளிப்பது என்பது முயலான காரியம் என்பதால், தலைமுடி எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும். இது முடி உதிர்தல் பிரச்சனைக்கு ஒரு காரணமாக அமையும். இதோ இந்த நேரத்தில் குளிர்காலத்தில் தலைமுடியை எப்படி பராமரிக்க வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்..

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்கும் வழிமுறைகள்:

  • குளிர்காலத்தில் அலை அலையான முடி வறட்சிக்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே அதை எப்போதும் நீரேற்றத்துடன் வைப்பது முக்கியம். இதை சரி செய்ய வேண்டும் என்றால் குளிர்காலத்தில் தலைமுடிக்கு ஷாம்பு மற்றும் கன்டிஷனரைப் பயன்படுத்தவும். இது ஈரப்பதத்தை மீட்டெடுத்து தலைமுடிக்கு பாதுகாப்பது அளிக்கிறது. எனவே குளிர்காலத்தில் வாரத்திற்கு ஒருமுறையாவது ஷாம்பு அல்லது கன்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும்.
  • பருவ காலங்களில் தலைமுடியை ஸ்ரைட் செய்வதற்காக அடிக்கடி ஹேர் ட்ரையர் மற்றும் ஸ்ட்ரைனிங் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துகிறோம். அடிக்கடி இதுபோன்ற இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது முடி வறண்டு போய்விடுவதோடு தலை முடி கொட்டுவதற்கும் வழிவகுக்கும். எனவே இதைத் தவிர்ப்பது நல்லது.
  • குளிர்காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த காற்றினால் தலைமுடியில் பொடுகுத் தொல்லை ஏற்படும். எனவே வெளியில் செல்லும் போது தலையில் தொப்பி அணிந்து செல்லவும். மேலும் தலைமுடி ஈரப்பதத்துடன் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க: எப்போதும் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா? தினமும் இந்த பழக்கங்களை அவசியம் கடைபிடிக்கவும்

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தவும். இது குளிர்காலத்தில் தலைமுடியின் வேர் வரை ஊடுவிருவி, உள்ளிருந்து தலைமுடியைப் பாதுகாக்க உதவுகிறது.

மேலும் படிக்க: Aloe Vera for Hair: குளிர்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் கற்றாழை; இந்த 4 ஹேர் மாஸ்கை பயன்படுத்தவும்


தலைமுடியைப் பராமரிக்க விலையுயர்ந்த ஷாம்புகள் மற்றும் கன்டிஷனர்கள் தேவை என்பதில்லை. நம்முடைய சமையல் அறையில் கிடைக்கும் முட்டை, அவகோடா பழங்கள், ஆலிவ் எண்ணெய் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துள்ள பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே ஹைட்ரேட்டிங் ஹேர் மாஸ்க்கைத் தயார் செய்யலாம். இதை தலைமுடிக்குப் பயன்படுத்தும் போது, முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு பளபளப்பையும் அளிக்கிறது. இதோடு மட்டுமின்றி உச்சந்தலையில் ஏற்படக்கூடிய தொற்று நோய் பாதிப்புகளையும் எதிர்த்துப் போராட உதவுகிறது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com