இயற்கையோடு இணைந்து வாழவிடில் எண்ணற்ற நோய் பாதிப்புகளைச் சந்திக்க முடியும். அந்தளவிற்கு இன்றைய உணவுப்பழக்கம் முதல் பழக்கவழக்கள் வரை அனைத்திலும் மாற்றம் என்ற பெயரில் நம்முடைய பாரம்பரிய வாழ்க்கையைத் தொலைத்து வருகிறோம். இவற்றை மீட்டெடுப்பதோடு வாழ்க்கையில் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதற்காக நம்மில் பலர் சிறுதானிய உணவு முறைகளுக்கு மாறி வருகின்றன. எந்தளவிற்கு வழக்கமான அரிசிகளை சாப்பிடுவதைத்தவிர்த்து சிறுதானியங்களில் செய்யக்கூடிய உணவுகளைச் சாப்பிடுகிறோமோ? அந்தளவிற்கு உடல் நலத்துடன் இருக்க முடியும். இன்றைக்கு சில சிறுதானியங்களின் பயன்கள் மற்றும் அவற்றை வைத்து செய்யக்கூடிய உணவு முறைகள் என்னென்ன? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
சிறுதானியங்கள் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:
இதய ஆரோக்கியம் காக்கும் திணை:
திணையில் இரும்பு, கால்சியம், நார்ச்சத்துக்கள் போன்ற பல்வேறு அடிப்படை ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதைத் தடுக்க உதவியாக இருக்கும். நார்ச்சத்துக்கள் இருப்பதால் செரிமான அமைப்பை சீராக்கி உடல் பருமன் ஏற்படுவதையும் தடுக்கிறது. இது இதய ஆரோக்கியத்திற்கும் பேருதவியாக உள்ளது. மேலும் திணையில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளதால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது.
சிறுதானியங்களில் ஒன்றாக திணையை வைத்து திணை லட்டு, திணை பொங்கல், திணை உப்புமா போன்ற பல்வேறு ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் செய்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க:எலும்புகளை வலுப்படுத்தும் ஆரோக்கியம் நிறைந்த எள்ளு லட்டு!
உடலுக்குத் தெம்பு அளிக்கும் கம்பு:
நம்முடைய முன்னோர்களின் பராம்பரிய சிறுதானிய உணவுகளில் ஒன்றாக உள்ளது கம்பு. நாள் முழுவதும் காடுகளில் வேலைப்பார்த்த மூதாதையர்களின் உணவாக இருந்து வந்தது கம்பங்கூழ். இதை மட்டும் குடித்துக் கொண்டே வாழ்நாள் முழுவதும் தெம்புடன் வாழ்ந்து வந்தார்கள். அந்தளவிற்கு கம்புவில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் போன்ற மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்குத் தெம்பு அளிக்கும் வகையில் அமைகிறது கம்பு.
உடலுக்கு வலிமையளிக்கும் சாமை:
சாமையில் மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து உடலுக்கு வலிமை அளிக்கிறது. மேலும் இரத்த சோகை பாதிப்பு உள்ளவர்களும் சாமையை உணவு முறையில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
மேலும் படிக்க:ஆரோக்கியம் அளிக்கும் முள்ளங்கி சப்பாத்தி ரெசிபி டிப்ஸ்!
நமது உடலில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற்று குதிரைப் பலம் பெற வேண்டும் என்றால் குதிரைவாலியையும், உடலில் உள்ள சோம்பல் நீங்க சோளத்தையும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல் நல பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்றால் சிறுதானிய உணவான வரகு அரிசியையும் உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதை வைத்து குழந்தைகளுக்குப் பிடித்தவாறு லட்டு, குக்கீஸ்கள் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளையும் செய்துக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation