
ஒவ்வொரு காய்கறியிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அதன்படி, பீட்ரூட்டில் இருக்கும் நன்மைகள் மற்றும் பயன்கள் குறித்து விரிவாக காணலாம்.
இயற்கையாக கிடைக்கக் கூடிய உணவு பொருட்கள் அனைத்திலும் பல வகையான சத்துகள் நிறைந்துள்ளன. ஆனால், அவை குறித்த புரிதல் இன்று பலரிடம் இருப்பதில்லை. அந்த வகையில், நம் ஊரில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் காணப்படும் ஊட்டச்சத்துகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும்.
பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் (Nitrates) நிறைந்துள்ளன. இவை இரத்த நாளங்களை தளர்வடைய செய்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன. இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதுடன், இருதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க: Benefits of cashews: முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
பீட்ரூட்டில் பீடெய்ன்கள் (Betaines) உள்ளன. இவை கல்லீரலின் செயல்பாட்டிற்கு உதவுகின்றன. இதன் மூலம், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற முடியும். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க பீட்ரூட் ஒரு இயற்கையான வழியாகும்.

பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் சீரான செரிமான அமைப்புக்கு உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இது கவனத்தை மேம்படுத்துகிறது, நினைவாற்றலை அதிகரிக்கிறது மற்றும் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக, வயதாகும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் 6 உணவுகள்; இவற்றை மிஸ் பண்ணாதீங்க மக்களே
பீட்ரூட் வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. இந்தச் சத்துகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க மிகவும் அவசியம். இது அடிக்கடி நோய்வாய்ப்படுவதை தவிர்க்க உதவும்.
பீட்ரூட்டில் உள்ள அன்டிஆக்சிடென்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் (Anti-inflammatory Compounds), ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன. இது சருமத்தை மிகவும் தெளிவாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதற்கு பங்களிக்கிறது.

பீட்ரூட் குறைந்த கலோரிகளை கொண்டிருந்தாலும், நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இது உங்களுக்கு நீண்ட நேரம் பசியின்மையை தந்து, வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான உடல் எடையை அடைய உதவுகிறது.
தொடர்ந்து பீட்ரூட் எடுத்துக்கொள்வது இரத்த ஓட்டம் மற்றும் நச்சு நீக்கும் செயல்முறைகளை மேம்படுத்துகிறது. இதனால் உங்கள் உடல் அதிக ஆற்றலுடனும், சமநிலையுடனும் உணர உதவுகிறது.
பீட்ரூட் ஆரோக்கியமானது என்றாலும், உங்களுக்கு சிறுநீரக கற்கள் வரும் அபாயம் இருந்தால் அல்லது வேறு ஏதேனும் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், இதனை உட்கொள்வதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com