Diabetic Friendly Sweet : சர்க்கரையே இல்லாமல் ஹெல்த்தியான ஸ்வீட் செய்யலாம் வாங்க!

ஸ்வீட் சாப்பிட பிடிக்கும். ஆனால் அது ஆரோக்கியமானதாகவும் வேண்டுமா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள ரெசிபி உங்களுக்கு நிச்சயம் உதவும்…

healthy sweet roll without sugar
healthy sweet roll without sugar

பண்டிகை நாட்கள், கொண்டாட்டங்கள் என எந்த விசேஷமும் ஸ்வீட் இன்றி நிறைவடையாது. இருப்பினும் அதிகமாக சர்க்கரை சேர்த்து செய்யப்படும் இனிப்புகளை வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது சர்க்கரை நோயாளிகளால் சாப்பிட முடியாது.

இன்றைய பதிவில் அனைவரும் சாப்பிடும் வகையில் ஒரு ஆரோக்கியமான ஸ்வீட் ரெசிபியை பார்க்கப் போகிறோம். சர்க்கரை சேர்க்கப்படாத இந்த ஸ்வீட் ரெசிபியை சர்க்கரை நோயாளிகளும்ம் சாப்பிடலாம். இருப்பினும் அளவோடு எடுத்துக் கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது. இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

khajur roll sweet

  • பேரிச்சம்பழம் - 500 கிராம்
  • கசகசா - 1/4 கப்
  • பாதாம் - 4 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  • முந்திரி - 4 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  • பிஸ்தா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

nuts roll recipe

  • முதலில் பேரிச்சம்பழங்களை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். இதனை வேகமாக அரைக்காமல் இடைவெளிகள் விட்டு மெதுவாக அரைத்துக் கொள்ளவும்.
  • இடையில் ஒரு ஸ்பூனை வைத்து கலந்து பேரிச்சம்பழங்களை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பேரிச்சம் பழங்களை ஒரு தட்டில் மாற்றி வைக்கவும்.
  • ஒரு கடாயில் கசகசாவை சேர்த்து, குறைந்த தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இதனையும் தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
  • இப்போது அதே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி 3 நட்ஸ் வகைகளையும் சேர்த்து ஈரத்தன்மையில்லாமல் நன்கு வறுத்துக் கொள்ளவும். வருத்த நட்ஸ் வகைகளை தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
  • கடாயில் மீதமுள்ள ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள பேரிச்சம் பழங்களை சேர்த்து வதக்கவும்.
  • பேரிச்சம் பழங்கள் நன்கு வதங்கி மாவு பதத்திற்கு வரும் வேளையில், வறுத்து வைத்துள்ள நட்ஸ் சேர்க்கவும்.
  • இவற்றை நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும். சூடு தணிந்த பிறகு இதனை பெரிய ரோலாக செய்து கொள்ளவும். பின்பு கசகசாவில் உருட்டி எடுத்து பட்டர் பேப்பரில் சுற்றி பிரிட்ஜில் வைக்கவும்.
  • ஒரு மணி நேரம் கழித்து துண்டுகளாக போட்டு பரிமாறலாம்.

குறிப்பு

  • பேரிச்சம் பழங்களை கொரகொரப்பாக மட்டுமே அரைக்க வேண்டும்.
  • பேரிச்சம் பழங்களை அரைக்க தண்ணீர் சேர்க்கக்கூடாது.
  • நீங்கள் விரும்பினால் வேறு சில நட்ஸ் வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • நட்ஸில் ஈரத்தன்மை இல்லாமல் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இல்லை எனில் அவை சீக்கிரம் கெட்டுவிடும்.

இந்த பதிவும் உதவலாம்: இனி இந்த சாக்லேட் ஓட்ஸ் சாப்பிட்டு ஈஸியா எடையை குறைக்கலாம்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP