மக்கள் என்ன தான் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பொருளாதார சேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதாக வேலைக்குச் சென்றாலும். ஏதாவது விசேசம் என்றால் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை அதிகளவில் இருக்கும். அதிலும் தீபாவளி பண்டிகை என்றால் சொல்லவே தேவையில்லை. இரண்டு மாத காலத்திற்கு முன்னதாக சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து காத்திருப்பார்கள். குறிப்பாக தீபாவளி நேரத்தில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குப் படையெடுக்கும் மக்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த சூழலைத் தவிர்க்கும் விதமாக ரயில்வே நிர்வாகம் புதிய செயல்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அது என்ன? இதனால் மக்கள் எப்படி பயனடைவார்கள்? என்பது குறித்த முழு விபரம் இங்கே.
தீபாவளிக்கு மின்சார ரயில் சேவை:
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று பேருந்துகள் மற்றும் ரயில்கள் கிடைக்காமல் இரவு முழுவதும் காத்திருக்கும் பயணிகளைக் கூட்டத்தைப் பார்த்து வருகிறோம். சில நேரங்களில் பேருந்துகளைக் கிடைக்காமல் பண்டிகை நாட்களுக்கு அடுத்த நாள் கூட சொந்த ஊர்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற சூழலைத் தவிர்க்கும் விதமாக இந்தாண்டு தென்னக ரயில்வே துறை அதிகாரிகள் புதியதாக மின்சார ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஆம் சென்னை எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து மதுரை, கோவை, கன்னியாகுமரி, திருச்சி,நெல்லை போன்ற தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே 11 மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அனுமதிக்கு ரயில்வே வாரியத்திடம் முறையிட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட தென் மாவட்டங்களுக்குத் தான் அதிகளவில் பயணிகள் செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் போல் இல்லாமல் அனைத்துப் பயணிகளுக்கும் கூட்ட நெரிசல் இன்றி மகிழ்ச்சியுடன் செல்வதற்கு ஏற்ற வகையில் மின்சார ரயில் சேவை அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டிக்கெட் முன்பதிவு:
இந்தாண்டு 2025 ல் வருகின்ற அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் ரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு தொடங்கியது. சில மணி நேரத்திலேயே இணைய வழியாக டிக்கெட் முன்பதிவுகள் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Image credit - Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation