Navratri Wishes in Tamil: நடப்பு ஆண்டிற்கான நவராத்திரி திருவிழா இன்று (செப்டம்பர் 22) முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மகிசாசுரன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக அம்பாள் மேற்கொண்ட தவத்தை நவராத்திரி திருவிழா உணர்த்துகிறது.
மேலும் படிக்க: Navratri Decoration 2025: நவராத்திரியை கொலு வைத்து கொண்டாடுவது எப்படி? முழு விவரம் இதோ
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா இந்து மதத்தினரால் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்தவரும் தங்கள் கலாசாரத்தின் அடிப்படையில் நவராத்திரி திருவிழாவை கொண்டாடுகின்றனர். இதன் ஒரு பகுதியாக தென்னிந்தியாவில் கொலு அமைத்து நவராத்திரியை மக்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்நிலையில், இந்த நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழக் கூடிய வாழ்த்துச் செய்திகள் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை குறுஞ்செய்திகளாகவோ அல்லது வாட்ஸ் ஆப்பிலோ பகிர்ந்து உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
மேலும் படிக்க: Kantha Sashti Viratham 2025: 48 நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கும் நேரம்; விரத நாளில் முருகனை வழிபடும் முறைகள்
மகிமை, புகழ், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி, அமைதி, மனிதநேயம், அறிவு மற்றும் ஆன்மிகம் என அன்னை துர்கையின் ஒன்பது ஆசீர்வாதங்கள் உங்களை மகிழ்விக்கட்டும். நவராத்திரி வாழ்த்துகள்!
துர்கா தேவி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியால் நிரப்பி, இந்த நவராத்திரியில் உங்களுக்கு சந்தோஷத்தை வழங்கட்டும். இனிய நவராத்திரி வாழ்த்துகள்!
நவராத்திரி வாழ்த்துகள்! அன்னை துர்கா தேவி உங்கள் விருப்பங்களை நிறைவேற்றி, உங்களுக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் அருளட்டும்.
நவராத்திரி பண்டிகை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். இனிய நவராத்திரி வாழ்த்துகள்!
இந்த நவராத்திரி என்றும் இல்லாத அளவுக்கு பிரகாசமாக இருக்கட்டும். அது உங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் கொண்டு வரட்டும். இனிய நவராத்திரி வாழ்த்துகள்!
ஆசீர்வாதங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நிறைந்த மகிழ்ச்சியான மற்றும் வளமான நவராத்திரி வாழ்த்துகள்.
இந்த நவராத்திரி முழுவதும் துர்கா தேவியின் தெய்வீக இருப்பு உங்களுடன் இருக்கட்டும். இனிய நவராத்திரி வாழ்த்துகள்!
நவராத்திரியின் இந்த சுப நாளில், அன்னை துர்கா உங்கள் வாழ்க்கையை எண்ணற்ற ஆசீர்வாதங்களால் ஒளிரச் செய்யட்டும். இனிய நவராத்திரி வாழ்த்துகள்!
பக்தி, ஆன்மிகம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இந்த ஒன்பது நாட்களுக்கு உங்களுக்கு வாழ்த்துகள். இனிய நவராத்திரி வாழ்த்துகள்!
இந்த நவராத்திரியில் அன்னை துர்கா தேவி உங்களுக்கு வலிமை, தைரியம் மற்றும் ஞானத்தை வழங்கட்டும். இனிய நவராத்திரி வாழ்த்துகள்!
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com