Weight loss tips: உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் அவசியம். ஆனால், உணவு கட்டுப்பாடு மற்றும் தீவிரமான உடற்பயிற்சி மட்டுமல்லாமல் உடல் எடையை குறைப்பதற்கான எளிய வழிகள் உள்ளன. அவை குறித்து இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: Fatty liver: கல்லீரல் பாதிப்புக்கு இதுதான் முக்கிய காரணம்: நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல் இதோ
உணவு எடுத்துக் கொண்ட பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உடல் எடையை குறைப்பதற்கான எளிய வழிகளில் ஒன்றாகும். இது செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதோடு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் குறைக்கிறது. இதன் மூலம், உடலில் கலோரிகள் சேர்வது குறைந்து, உடல் எடை குறைய உதவுகிறது. நீங்கள் வேலை செய்யும் இடங்களில் கூட சிறிது தூரம் நடப்பது, மாடிப்படிகளில் ஏறி இறங்குவது என எளிய வேலைகளை செய்வதால் ஒரு நாளைக்கு 3000 முதல் 5000 அடிகள் நடப்பதற்கு சமமான பலனை பெறலாம். இதனால், கலோரிகள் குறைவதோடு, வயிறு உப்புசம், செரிமான கோளாறு, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளும் குறைகிறது.
காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. மேலும், காலையில் எழுந்த 2 மணி நேரத்திற்குள் 20 முதல் 40 அவுன்ஸ் தண்ணீர் குடிப்பது, உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், காலையில் எழுந்த 2 மணி நேரத்திற்குள் 20 முதல் 30 கிராம் புரதம் சாப்பிடுவது அவசியம். இது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதோடு, தசைகளின் வளர்ச்சிக்கும், செரிமானத்திற்கும் உதவுகிறது. உடலுக்கு நன்மை தரும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான உணவுகளுடன் சரியான நேரத்திற்கு தண்ணீர் குடிப்பதும், போதுமான அளவு புரதத்தை எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
மேலும் படிக்க: Benefits of almonds: சருமத்தை பொலிவாக்கும்; எலும்புகளை வலுப்படுத்தும் - ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
உடல் எடையை குறைக்க கலோரி குறைப்பு மிகவும் முக்கியம். அதாவது, ஒரு நாளில் நீங்கள் சாப்பிடும் கலோரியின் அளவை, உங்கள் உடல் பயன்படுத்தும் கலோரியின் அளவை விட சற்று குறைவாக வைத்துக் கொள்வது அவசியம். இவ்வாறு செய்யும் போது அதிக கலோரிகள் உடலில் சேர்வது தவிர்க்கப்படும்.
இந்தக் குறிப்புகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுவதன் மூலம் உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். மேலும், மன அழுத்தம் இல்லாத உடல் எடை குறைப்பு முறையும் சாத்தியம் ஆகும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com