Green Gram Dosa Recipe : ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயிறு தோசை செய்முறை

வாரம் ஒரு முறை பச்சை பயிறு தோசை சாப்பிட்டால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

 
health benefits of green gram dosa

இளம் பருவதில் நாம் சாப்பிடும் உணவுகளால் உடலுக்கு எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என சிந்தித்து பார்ப்பதில்லை. சில சமயங்களில் விஷம் என்று கூட தெரியாமல் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறதே ஒரு முறை சாப்பிட்டு பார்க்கலாம் என்ற சூழலுக்கு நாம் வந்துவிட்டோம். வயது 30 அல்லது 40-ஐ தாண்டும் போது தான் உடல் ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்க ஆரம்பிப்போம். அதன் பிறகு நாம் எது சாப்பிட்டாலும் ஏற்கெனவே இழந்த இடைவெளியைத் திரும்பப் பெற முடியாது. ஆனால் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள சத்தான உணவுகளைச் சாப்பிட ஆரம்பிக்கலாம். இந்த கட்டுரையைப் படித்த பிறகு நீங்களும் இவ்வளவு நாட்கள் நாம் ஏன் இது போன்ற உணவுகளை சமைத்து சாப்பிடவில்லை என கவலைப்படாமல் உங்கள் குழந்தைகளையாவது தற்போது இருந்தே ஆரோக்கியமாக வளர்த்திடுங்கள்.

அந்த வகையில் நாம் பார்க்கப்போகும் ஆரோக்கியமான உணவு முளைகட்டிய பச்சை பயிறு தோசை. இந்த தோசையில் அதிக புரதம் உள்ளது. இதற்கு கடலை பருப்பு சட்னி அற்புதமான காம்போ ஆகும்

green gram dosa

பச்சை பயிறு தோசை செய்யத் தேவையானவை

  • பச்சை பயிறு
  • கடலை பருப்பு
  • துவரம் பருப்பு
  • அரிசி
  • தேங்காய் - இரண்டு
  • வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி
  • உப்பு
  • கடலெண்ணெய்
  • நல்லெண்ணெய்
  • நெய்
  • கறிவேப்பிலை
  • தண்ணீர்
  • புளி
  • குண்டு மிளகாய்

கவனம் கொள்க

இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பாக பச்சை பயிறை தண்ணீரில் ஊற வைக்கவும். குறைந்தது ஆறு மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீரை வடிகட்டி தூய்மையான துணி மீது ஈரப்பதத்துடன் பச்சை பயிறை வைக்கவும். இரண்டு நாட்களுக்குள் பச்சை பயிறு முளைகட்டிவிடும்.

நாம் ஒரே அளவில் தான் கடலை பருப்பு, துவரம் பருப்பு, அரிசி, பச்சை பயிறு பயன்படுத்தப் போகிறோம். எனவே தலா 200 கிராம் கடலை பருப்பு, துவரம் பருப்பு, அரிசி ஆகியவற்றையும் நான்கு மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைகக்வும்.

மேலும் படிங்ககர்நாடக ஸ்பெஷல் அக்கி ரொட்டி! ஆரோக்கியமான காலை உணவு

பச்சை பயிறு தோசை செய்முறை

  • முதலில் கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். மிக்ஸியில் அரைக்க வேண்டாம். அது மாவின் தன்மையை மாற்றிவிடும்.
  • பருப்புகள் அரையும் போதே ஒரு முழு தேங்காயை துருவி சேர்க்கவும். பருப்புகள் 30 விழுக்காடு அளவிற்கு அரைபட்டவுடன் முளைகட்டிய பயிறை சேர்க்கவும். இதனுடன் ஊறவைத்த 200 கிராம் அரிசியையும் சேர்க்கவும்.
  • அடை மாவு போல் பச்சை பயிறு தோசை மாவு அரைந்த பிறகு இரண்டி மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடிதாக நறுக்கி போடுங்கள். தேவையான அளவு கொத்தமல்லியும், உப்பும் சேர்க்கவும்.
  • இவற்றுடன் இரண்டு பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி போடுங்கள். தோசை ஊற்றுவதற்கு ஏதுவாகத் தண்ணீர் சேர்க்கவும்.
  • 15 நிமிடத்திற்கு மாவை அப்படியே விட்டு விடுங்கள். இதனிடையே நாம் கடலை பருப்பு துவையல் தயாரிக்கலாம்
  • கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு மூன்று ஸ்பூன் கடலைப் பருப்பு போடவும்.
  • கடலை பருப்பு பொரிந்தவுடன் எட்டு குண்டு மிளகாய், ஒரு மூடி துருவிய தேங்காய், அரை டீஸ்பூன் பெருங்காயம் சேர்க்கவும்.
  • இதனுடன் தேவையான அளவு உப்பு, கொஞ்சம் புளி சேர்த்திடுங்கள்.
  • அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  • இதை தாளிக்க கடலெண்ணெய் இரண்டு ஸ்பூன், அரை ஸ்பூன் கடுகு, கொஞ்சம் கறிவேப்பிலை பயன்படுத்தவும்.

இறுதியாக தோசைக்கல்-ல் அரைத்த பச்சை பயிறு மாவை ஊற்றி நெய் போட்டு சுட்டு சாப்பிட்டால் ருசியாகவும் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP