ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்து பார்க்கப் போகும் உணவு ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு. நம்ம ஊரு பஜ்ஜி, போண்டாவை போல ஆந்திராவில் புனுகுலு மிகவும் பிரபலம். மாலை 4 மணி அளவில் ஆந்திராவில் தள்ளு வண்டி கடை நடத்துபவர்கள் சுட சுட புனுகுலு தயாரித்து வழங்குவார்கள். பெயர் வித்தியாசமாக இருப்பதால் சமைப்பது கடினம் என நினைக்க வேண்டாம். செய்முறையும் எளிது ருசியும் அற்புதமாக இருக்கும். இதை காரச் சட்னியுடன் தொட்டு சாப்பிட வேண்டும்.
புனுகுலு செய்யத் தேவையானவை
- மைதா மாவு
- தயிர்
- சீரகம்
- தண்ணீர்
- உப்பு
- காய்ந்த மிளகாய்
- பூண்டு
- தக்காளி
- வெங்காயம்
- கடலெண்ணெய்
- கடுகு
- பேக்கிங் சோடா
புனுகுலு செய்முறை
- ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவிற்கு மைதா போட்டு, ஒரு கப் தயிர், அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து இவற்றை நன்கு மிக்ஸ் செய்யவும்
- சப்பாத்தி மாவு போல மிகவும் கெட்டியாக இல்லாமல் தோசை மாவு அளவிற்கு தண்ணீயும் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து மாவை தயாரிக்கவும்.
- அதிகபட்சமாக உங்களுக்கு கால் கப் தண்ணீர் தேவைப்படும். வடை சுடுவதற்கான மாவு போல் இருக்க வேண்டும். இந்த மாவை மூன்று மணி நேரத்திற்கு எதுவும் செய்யாமல் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.
- நீங்கள் புளித்த தயிரை பயன்படுத்தி இருந்தால் ஊற வைக்கும் நேரத்தை ஒரு மணி நேரமாகக் குறைத்து கொள்ளவும். இதை மூடி போட்டு தனியே வைத்து விடுங்கள்.
- இதனிடையே புனுகுலுவுடன் தொட்டு சாப்பிடுவதற்கான சட்னியை தயாரிக்கலாம்.
- அதற்கு ஒரு பேனில் மூன்று ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு அரை ஸ்பூன் தனியா, ஐந்து காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.
- இதனுடன் ஒரு கூட ஒரு மீடியம் சைஸ் வெங்காயம் சேர்க்கவும். பொன்னிறத்திற்கு மாறியவுடன் இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும். கொஞ்சம் கறிவேப்பிலையும் சேருங்கள்.
- ஐந்து நிமிடங்களில் தக்காளி வதங்கி விடுங்கள். இதை கொஞ்சம் நேரத்திற்கு ஆற விடுங்கள்.
- அதன் பிறகு இரண்டு பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
- தேவைப்பட்டால் கடுகு தாளித்து காரச் சட்னியில் சேர்த்து விடுங்கள்.
- அடுத்ததாகப் புனுகுலு மாவை நன்றாக ஐந்து நிமிடங்களுக்கு மிக்ஸ் செய்து பஞ்சு போல மாற்றவும்
- கடாயில் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு மினி லட்டு சைஸிற்கு மாவை உருண்டை பிடித்து கடாயில் போட்டு வறுத்து எடுங்கள்.
இது உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation