தமிழர்களுக்கு ஆடி மாதம் மிகவும் புனிதமான ஒரு மாதம். இது அம்மனுக்கு உகந்த மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் கோவில்களில் விசேஷ பூஜைகளும், ஊர்த்திருவிழாக்களும் நடைபெறும். ஆடி மாதத்தில் ஆடி 18 வரும் ஆடிப்பெருக்கு மிகவும் சிறப்பான நாள் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் மக்கள் பல்வேறு சுவையான உணவுகளை தயாரித்து அம்மனுக்கு படைப்பார்கள். அவற்றில் ஒன்று தான் ஆடிபால். இதை ஆடிதேங்காய்ப்பால் என்றும் கூறலாம். சுவையான ஆடி பால் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தமிழ் மாதங்களில் ஆடி மிக முக்கியமானது. கிராமங்களில் இந்தப் பாரம்பரிய பானம் ஆடிப்பால் தயாரிக்கப்படுகிறது. புதிதாக திருமணமான பெண் மாப்பிள்ளையை ஆடி முதல் நாளில் அழைத்து ஆடிபால் வழங்குவது வழக்கம். இந்தப் பால் உடலுக்கு குளிர்ச்சியும், பலமும் தரும் என்று நம்பப்படுகிறது. அதே போல இது ஆடி முதல் நாள் மற்றும் ஆடி வெள்ளி நாட்களில் அம்மனுக்கு படைக்கப்படுகிறது.
ஒரு பாத்திரத்தில் வெல்லம்/கருப்பட்டியை ½ கப் தண்ணீரில் கரைய வைக்கவும். இது முழுவதும் கரைந்த பின், வடிகட்டி கற்கள் அல்லது அசுத்தங்களை நீக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, மிதமான தீயில் காய்ச்சவும். இதன் பிறகு பால் பொங்கி வரும்போது தீயை குறைத்து, அடி படாமல் கிளறவும்.
மேலும் படிக்க: தேங்காய் சட்னியை இப்படி அரைச்சு பாருங்க; நாள் முழுக்க கெடாமல் இருக்கும்
பால் நன்றாக காய்ச்சிய பின், அடுப்பை அணைக்கவும். நாம் ஏற்கனவே வடிகட்டிய வெல்லப்பாகை இந்த பாலில் சேர்க்கவும். இதனை அடுத்து சிறிது சூடு தணிந்த பின், தேங்காய்ப்பாலை இதில் சேர்க்கவும். அதிக சூடில் சேர்தால் தேங்காய்ப்பால் திரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்றாக சூடாறிய பிறகு சேர்க்க வேண்டும்.
சுக்குத்தூள், மஞ்சள், ஏலக்காய்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். இதனை தொடர்ந்து நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து அலங்கரிக்கவும். அவ்வளவு தான் சுவையான ஆடிப்பால் தயார்.
இதை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம். மேலும் ஆடி முதல் நாளில் இறைவனுக்கு படைத்த பின், குடும்பத்துடன் சேர்ந்து இதை அருந்தலாம். வீட்டில் இந்த ஆடிப்பால் செய்து பாருங்க இது ஆடி மாதத்தின் சிறப்பை மேலும் அதிகரிக்கும்.
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com