தேங்காய் சட்னியை இப்படி அரைச்சு பாருங்க; நாள் முழுக்க கெடாமல் இருக்கும்

காலை டிஃபனுக்கு அரைத்த தேங்காய் சட்னி பல நேரங்களில் மதியமே கெட்டு போய்விடும் அல்லது தண்ணீர் விட்டது போல இருக்கும் இல்லையென்றால் சீக்கிரம் புளித்து விடும். 
image

பெரும்பாலான வீடுகளில் தினசரி காலை உணவாக இட்லி தோசை தான் இருக்கும். இந்த இட்லி தோசைக்கு சிறந்த காம்பினேஷன் தேங்காய் சட்னி. இட்லி தோசை மட்டும் இல்லாமல் பொங்கல் வடை பணியாரம் போன்ற பல உணவுகளுக்கும் இந்த தேங்காய் சட்னி முக்கியமான ஒரு சைட் டிஷ். காலை டிஃபனுக்கு அரைத்த தேங்காய் சட்னி பல நேரங்களில் மதியமே கெட்டு போய்விடும் அல்லது தண்ணீர் விட்டது போல இருக்கும் இல்லையென்றால் சீக்கிரம் புளித்து விடும். அனைவரும் விரும்பி சாப்பிடும் தேங்காய் சட்னி சீக்கிரம் கெடாமல் இருக்க என்ன செய்யலாம்? அடுத்த முறை உங்கள் வீட்டில் தேங்காய் சட்னி அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்க பிரிட்ஜில் வைக்கவில்லை என்றாலும் அடுத்த நாள் காலை வரை கெடாமல் இருக்கும். நாள் முழுக்க கெடாமல் இருக்கும் தேங்காய் சட்னி செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

  • துருவிய தேங்காய் ஒரு கப்
  • கால் கப் பொட்டுக்கடலை
  • சிறிதளவு சின்ன வெங்காயம்
  • ஒரு பச்சை மிளகாய்
  • சிறிதளவு இஞ்சி

செய்முறை:

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து , எண்ணெய் சூடானதும் அதில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும். இஞ்சியின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். இதற்குப் பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கி வந்ததும் நாம் எடுத்து வைத்துள்ள பொட்டுக்கடலையை இதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இந்த பொட்டுக்கடலையின் பச்சை வாசம் நீங்கி நன்றாக வாசனை வரும் வரை வதக்க வேண்டும். இப்போது இதில் நாம் எடுத்து வைத்துள்ள துருவிய தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். இப்படி வதக்கி சட்னி அரைக்கும்போது அதிக நேரம் கெடாமல் இருக்கும் மற்றும் சுவையும் அருமையாக இருக்கும்.

coconut chutney recipe

இந்த தேங்காய் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இதை சூடு ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். சிறிதளவு தண்ணீர் மட்டுமே சேர்த்து அரைக்க வேண்டும். சட்னியில் அதிகம் தண்ணீர் சேர்த்து அரைத்தால் சீக்கிரமே தண்ணீர் விட்டது போல ஆகிவிடும். அதேபோல பூண்டு சேர்க்கக்கூடாது. பூண்டு சேர்த்தால் தேங்காய் சட்னி சீக்கிரம் புளித்து விடும்.

மேலும் படிக்க: நாவல் பழ சட்னி இருந்தால் கணக்கில்லாமல் இட்லி, தோசை சாப்பிடுவீங்க

அடுத்ததாக நாம் அரைத்து வைத்த இந்த தேங்காய் சட்னியில் தாளிப்பு சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெயில் கடுகு உளுத்தம் பருப்பு காஞ்ச மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளிச்சு இதில் கலந்து கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான தேங்காய் சட்னி தயார். இது ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே ஒரு நாள் ஆனாலும் கெடாமல் இருக்கும்.

Image source: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP