உடலுக்கு தூக்கம் என்பது இன்றியமையாதது. போதுமான அளவு தூங்குவது அன்றைய நாளுக்கான நமது மனநிலையை மேம்படுத்துகிறது. ஆனால், 8 முதல் 9 மணிநேரம் தூங்கிய பிறகும், நம்மில் பலர் நாள் முழுவதும் சோம்பலாக காணப்படுகிறோம். உடல் நிலை, மன அழுத்தம் மற்றும் பிற சுகாதார பிரச்சனைகள் இதற்கு காரணமாக இருந்தாலும், நாம் தேர்ந்தெடுக்கும் உணவு பழக்கமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் படிக்க: மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் 8 எளிய குறிப்புகள்
சோர்வு மற்றும் குறைந்த ஆற்றல் ஆகியவை நம் உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. இந்தத் தொடர்ச்சியான சோர்வு நாள் முழுவதும் தூக்கம் வருவது போன்ற உணர்வை தருகிறது. அதன்படி, நீங்கள் அதிக ஆற்றலுடன் இருக்க உதவும் சில வகையான உணவுகள் குறித்து இதில் பார்க்கலாம்.
சோர்வு மற்றும் சுறுசுறுப்பின்மைக்கு ஒரு பொதுவான காரணம் இரும்புச்சத்து குறைபாடுதான். இது இரத்த சோகைக்கும் வழிவகுக்கும். இந்தக் குறைபாட்டை சீரமைக்க சிறந்த உணவு பொருள் கீரை. இது இரும்புச்சத்தின் ஒரு ஆற்றல் மையமாக செயல்படுகிறது. இதில் மெக்னீசியமும் நிறைந்துள்ளது. இதனை உங்கள் சாலட்கள், சூப்கள் போன்றவற்றில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சத்து மட்டுமின்றி சுவையாகவும் இருக்கும்.
ஃபோலேட் குறைபாடு சோர்வை ஏற்படுத்தும். பருப்பு வகைகள் இந்த குறைபாட்டை சரிசெய்ய உதவும். தாவர அடிப்படையிலான ஃபோலேட் நிறைந்த உணவுகளில் பருப்பு வகைகளும் ஒன்று. இவற்றில் புரதச்சத்தும் நிறைந்துள்ளன. இவை உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவும்.
மேலும் படிக்க: நாவல் பழத்தின் நன்மைகள்: நீரிழிவு நோயாளிகளுக்கான முக்கிய குறிப்புகள்
பூசணி விதைகள் சிறியவைதான். ஆனால், அவை அதிக ஆற்றல் வாய்ந்தவை. இந்த விதைகளில் மெக்னீசியம், சின்க் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. சின்க், நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவுகிறது. சோர்வு அல்லது மன அழுத்தத்திலிருந்து மீண்டுவர இது உதவுகிறது. பூசணி விதைகள் உங்கள் மெக்னீசியம் உட்கொள்ளலை இயற்கையான முறையில் அதிகரிக்க ஒரு வழி. ஒரு கைப்பிடி வறுத்த பூசணி விதைகள் உங்கள் தினசரி தேவைக்கு போதுமானது.
வாழைப்பழங்கள் சர்க்கரைகள் மற்றும் நார்ச்சத்துகளின் கலவையாகும். இந்தக் கலவை, மற்ற இனிப்புகளை போல உடனடியாக அதிக சர்க்கரை அளவை கொடுத்து திடீரென சோர்வடைய செய்யாது. இது குளுக்கோஸை உடலுக்கு கொடுக்கிறது. பொட்டாசியம் குறைவாக இருப்பது பலவீனம் மற்றும் சோர்வை ஏற்படுத்தலாம். வாழைப்பழங்களில் பொட்டாசியம் நிரம்பியுள்ளது. இது உடலின் நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாடுகளை சீரமைக்க உதவுகிறது. நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்தை மருத்துவர் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது.
வைட்டமின் பி12 குறைபாடு ஒருவர் தூக்கமில்லாமல் இருப்பது போல சோர்வாக உணர வைக்கும். சால்மன், மத்தி போன்ற மீன்களில் வைட்டமின் B12 நிரம்பியுள்ளன. இது சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கவும், ஆக்ஸிஜனை கொண்டு செல்லவும் உடலுக்கு உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு முறை இந்த மீன்களை சாப்பிடுவது, பி12 குறைபாட்டால் ஏற்படும் சோர்வைத் தடுத்து மனநிலையை மேம்படுத்தும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com