வெறும் 10 நிமிடம் போதும்; ஈஸியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளை ட்ரை செய்து பாருங்க

தினசரி லஞ்ச் பேக் செய்து கொடுக்க சில ஈஸியான ரெசிபிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம். வெறும் பத்து நிமிடம் இருந்தால் போதும் வித்தியாசமாக சுவையான ஆரோக்கியமான உணவுகளை சமைத்து அசத்தலாம். 
image

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் அலுவலகத்திற்கு செல்லும் கணவர்களுக்கும் மதிய உணவு சமைத்து பேக் செய்து கொடுப்பது ஒரு பெரிய டாஸ்காக மாறிவிட்டது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட மறுப்பார்கள். அதேபோல தினமும் காய்கறிகளை சமைத்து கொடுப்பது அவர்களுக்கு எளிதில் போர் அடித்து விடும். அந்த வரிசையில் தினசரி லஞ்ச் பேக் செய்து கொடுக்க சில ஈஸியான ரெசிபிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம். வெறும் பத்து நிமிடம் இருந்தால் போதும் வித்தியாசமாக சுவையான ஆரோக்கியமான உணவுகளை சமைத்து அசத்தலாம்.

உருளைக்கிழங்கு சாதம்:


குழந்தைகளுக்கு காய்கறிகளில் பிடித்த ஒரு காய்கறி இந்த உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கு சாதம் செய்வது மிகவும் எளிதான ஒன்று. உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கூடுதலாக கேரட் பீன்ஸ் பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்த உருளைக்கிழங்கை கடாயில் எண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்த பிறகு நாம் நறுக்கி வைத்த கேரட் பட்டாணி மற்றும் பீன்ஸை சேர்த்து கிளற வேண்டும். இப்போது சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விடுங்கள்.இதனை பொரியல் போல சமைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மறுபுறம் சாதத்தை வடித்து இந்த உருளைக்கிழங்கு பொரியலில் கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் வெறும் 10 நிமிடங்களில் சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்.

beetroot-rice-pulao-pulav-served-bowl-karahi-selective-focus-indian-food_466689-71238

பனீர் மட்டர் சாதம்:


பொதுவாகவே குழந்தைகளுக்கு பன்னீர் மிகவும் பிடிக்கும். இந்த பன்னீரை சாப்பிட உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் கெஞ்ச வேண்டிய அவசியமே இருக்காது. ஏனென்றால் பன்னீரின் சுவை அனைவருக்கும் எளிதில் பிடித்து விடும். மேலும் இந்த இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதை நீங்கள் எந்த உணவுகளில் வேண்டுமானால் சேர்த்து சமைத்துக் கொள்ளலாம். அந்த வரிசையில் சிறிதளவு பன்னீர் மற்றும் பட்டாணி சேர்த்து ஒரு பொரியல் போல சமைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வடித்து வைத்த வெள்ளை சாதத்தை இந்த பன்னீருடன் சேர்த்து கலந்து கொடுத்தால் பன்னீர் மட்டர் சாதம் தயார்.

healthy-paneer-pulav-pilaf-using-basmati-rice-served-bowl-plate-indian-food_466689-72567

குடைமிளகாய் சாதம்:


நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காய்கறி இந்த குடைமிளகாய். இந்த குடைமிளகாயில் நார்ச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளதால் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் பேக் செய்யும் போது கலர்ஃபுல்லாக காய்கறிகளை வைத்து சமைத்து கொடுத்தால் வீணாக்காமல் சாப்பிடுவார்கள்.

side-view-rice-garnish-with-grilled-chicken-cucumber-carrot-bell-pepper-spring-onion_141793-5070
அந்த வகையில் குடைமிளகாய் சிவப்பு மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் உங்களுக்கு கிடைக்கும். முதலில் இந்த குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மேலும் சிறிதளவு வேகவைத்த மக்காச்சோளம் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது ஒரு கடாயில் நாம் பொடியாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். குடை மிளகாய் வெந்து வந்த பிறகு நாம் எடுத்து வைத்துள்ள மக்காச்சோளத்தை சேர்த்து கிளறி விடுங்கள். இப்போது வடித்து வைத்த வெள்ளை சாதத்தை இந்த குடைமிளகாய் பொரியலுடன் சேர்த்து கலந்து கொடுத்தால் கலர்ஃபுல்லான குடைமிளகாய் சாதம் ரெடி.

Image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP