இப்போதெல்லாம் அனைவரின் வீட்டிலும் தையல் மிஷினை பார்க்க முடிகிறது. பல தேவைக்களுக்காக பெண்கள் வீட்டிலேயே மிஷின் வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தையல் மிஷினை சரியாகச் சுத்தம் செய்யாவிட்டாலோ எண்ணெய் விடாமல் இருந்தாலோ அது பழுதாகி விடும். எனவே, இந்த பதிவில் தையல் மிஷினை பராமரிக்கும் முறைகள் குறித்து பார்ப்போம்.
1. இந்த பாகங்களுக்கு எண்ணெய் விடுங்கள்
துணியை தைப்பதற்கு முன்பு மிஷினின் ஊசி ஷட்டில் பாயின்ட், பாபின், நூல் போடும் வட்டு போன்ற பாகங்களில் எண்ணெய் விடவும்.
இந்த பதிவும் உதவலாம்:மொசைக் தரை பளபளக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்
2. பெடல்களைச் சுத்தம் செய்யுங்கள்
காலால் இயக்கும் மிஷின்களை வைத்திருந்தால் பெடல்களைச் சுத்தம் செய்ய மறவாதீர்கள். இதற்கு, பெடலில் இருக்கும் திருகு அல்லது முடிச்சில் எண்ணெய் விடவும்.
3. பவர் மிஷினை கவனமாக பராமரியுங்கள்
பவர் மிஷின் என சொல்லப்படும் எலக்ட்ரானிக் தையல் மிஷினை சுத்தம் செய்ய, ஒரு கப் தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்துக்கொள்ளவும். அதில் காட்டன் துணியை நனைத்து எடுத்து மிஷினை சுத்தம் செய்யவும். பின்பு பாபின் நூல் போடும் வட்டு ஆகியவற்றில் எண்ணெய் விடவும்.
4. ஊசியை கவனமாகப் பராமரியுங்கள்
வெவ்வேறு ஆடைகளை தைக்க வெவ்வேறு ஊசிகள் உள்ளன. இந்த விஷயத்தில் துணிகளுக்கு ஏற்ப ஊசியைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இரும்பு தையல் மிஷின்
இரும்பு தையல் மிஷினில் ஏதேனும் துரு இருந்தால், பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி அதை எளிதாக சுத்தம் செய்யலாம்.
6. தைக்கும் முறை
மிஷினில் தைக்கும்போது துணியை கடினமாக இழுக்க வேண்டாம். அவ்வாறு செய்வதால் துணி கிழியலாம் அல்லது மிஷினுக்கும் சேதம் ஏற்படலாம்.
7. இந்த காரணத்தினால் மிஷின் பழுதடைகிறது.
தடியான துணிகளை தைத்தாலோ, துணிகள் பலமுறை மாட்டிக்கொண்டாலோ தையல் மிஷின் பழுதடையும். இதை மனதில் கொண்டு மிஷினில் கவனமாக துணிகளை தைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்:அழுக்காக இருக்கும் பாத்ரூமை இப்படி கூட சுத்தம் செய்யலாம் தெரியுமா?
எனவே, இந்த விஷயங்களை மனதில் கொண்டு தையல் மிஷின்களை முறையாக பராமரியுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation