சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியதில் உள்ள உண்மைகளும் பரவிய வதந்திகளும்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்த இந்தியா வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் பூமிக்கு மார்ச் 19ஆம் தேதி திரும்பியுள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியதில் உள்ள உண்மைகளும் தேவையின்றி பரப்பப்பட்ட வதந்திகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
image

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதை ஒட்டுமொத்த உலகத்தை விட இந்தியா உற்று நோக்கியது என்றே சொல்லலாம். ஏனெனில் சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளி ஆவார். அவருடைய பூர்விகம் குஜராத் மாநிலம் ஆகும். 2024ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் செல்கின்றனர். 8-10 நாட்களில் பூமிக்கு திரும்ப வேண்டிய பயணம் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீடிக்கிறது. ஒன்றரை மாதங்களாக அவர்கள் அதை சரி செய்ய முயற்சிக்கின்றனர். இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி நிலையத்தில் தங்கும் நாட்களை நீட்டிக்கின்றனர். அமெரிக்க அரசியல் களத்தில் இதை பெரிதுபடுத்துகின்றனர். இந்த நிலையில் நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து இருவரையும் பூமிக்கு திருப்பி அழைத்து வரும் திட்டத்தை செயல்படுத்துகிறது. மார்ச் 19ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்.

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதற்கான ஏற்பாடு தொடங்கிய பத்து நாட்களுக்கு முன்பாகவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது பணிகளை அடுத்த கமாண்டரிடம் சுனிதா வில்லியம்ஸ ஒப்படைத்தார். சர்வதேச விண்வெளி நிலையமானது பூமியில் இருந்து 410 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு கால்பந்து மைதான அளவில் ரஷ்யாவும் - அமெரிக்காவும் ஆராய்ச்சி கூடத்தை கொண்டுள்ளது. 25 ஆண்டுகளாகவே பல விண்வெளி வீரர்கள் - வீராங்கனைகள் அங்கு சென்று வந்துள்ளனர். மார்ச் 14ஆம் தேதி முதல் விண்வெளி திரும்பும் வீரர்களுக்கான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதயம், நுரையீரல் செயல்பாடு, இரத்த அழுத்தம், கேட்கும் தீறன், பூமி திரும்புவதற்கான ஈர்ப்பு விசை பரிசோதனை, கதிர்வீச்சு தாக்கத்தை உடல் எதிர்கொள்ள கூடிய பரிசோதனை, மனநலன் உட்பட பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்லும் போதும், விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் போதும் இந்த பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

பூமியை நோக்கி சுனிதா வில்லியம்ஸின் பயணம்

மார்ச் 18ஆம் தேதி பூமிக்கு திரும்ப சுனிதா வில்லியம்ஸ் தயாராகின்றார். புதிதாக விண்வெளிக்கு சென்ற க்ரூ 10ல் சுனிதாவும் இதர விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்பவில்லை மாறாக 6 மாதங்களுக்கு முன்பு அங்கு சென்ற க்ரூ 9 டிராகன் விண்கலத்தில் திரும்பி வந்தனர். தொழில்நுட்ப ரீதியாக டிராகன் விண்கலத்தில் திரும்பும் போது நாசா - ஸ்பேஸ் எக்ஸ் அனுமதிக்காக காத்திருந்து புறப்படுகின்றனர். ஏனெனில் பூமிக்கு திரும்பும் போது 1200 டிகிரி செல்சியஸ் முதல் 1600 டிகிரி செல்சியஸ் வரை அந்த விண்கலன் வெப்பத்தை தாக்குப்பிடிக்க வேண்டியிருக்கும். விண்கலத்திற்குள் 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் தக்கவைக்கப்படும்.

மார்ச் 18ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 10.35 மணி அளவில் 25 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும் விண்வெளி நிலையத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி பூமியின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்து வேகத்தை குறைத்து பூமியில் தரையிரங்க வேண்டும். கோணம் (descent path) ஏற்ப பூமிக்குள் நுழைவது அவசியம். விண்வெளியில் காற்றின் தாக்கம் இருக்காது. ஆனால் பூமிக்குள் காற்றும், ஈர்ப்பு விசையும் இருப்பதால் வேக வேகமாக இறங்க முடியாது.

மார்ச் 19ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3.24 மணிக்கு பூமிக்குள் டிராகன் விண்கலம் நுழைகின்றது. வேகத்தை குறைக்க 4 பாராசூட்கள் பயன்படுத்தப்படுகின்றன. 17 மணி நேர பயணத்திற்கு பிறகு 3.27 மணி அளவில் ஃபுளோரிடா கடலில் மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் விண்கலன் கடலில் விழுகிறது. திட்டமிட்டபடி கடற்கரை குழுவினர் விண்கலத்தை ஒரு சிறிய கப்பலுடன் இணைத்து விண்கலனை திறக்கின்றனர். சுனிதா வில்லியம்ஸ் 3வது நபராகவும், புட்ச் வில்மோர் 4வது ஆளாகவும் விண்கலத்தை விட்டு வெளியேறினர். முன்னதாக விண்கலன் பகுதியில் டால்பின் உலா வந்து அவர்களை வரவேற்றது என்றே சொல்லலாம்.

மருத்துவ ரீதியாக இருவரும் 30 முதல் 45 நாட்கள் கண்காணிப்பில் இருப்பார்கள். விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர்கள் 1-2 மாத காலம் தங்குவது சகஜமே. சுனிதா வில்லியம்ஸ், புட்ச்மோரின் பயணம் எதிர்பாராதவிதமாக நீட்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றே சொல்லலாம். அவர்கள் இருவரும் சிக்கி தவிக்கவில்லை.

மேலும் படிங்கஉலகின் டாப் 7 பணக்கார பெண்கள் யார் தெரியுமா ? பட்டியலில் இந்திய பெண் உண்டா ?

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP