• Search
Close
எதையாவது தேடுகிறீர்களா?
Search

    Mosaic Floor Cleaning in Tamil: மொசைக் தரை பளபளக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்

    வீட்டு மொசைக் தரை மிகவும் அழுக்காக கறை படிந்து இருந்தால் அதை பளபளப்பாக மாற்றும் வழிமுறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 
    author-profile
    Published -21 Jan 2023, 14:00 ISTUpdated -22 Jan 2023, 20:23 IST
    Next
    Article
    mosaic cleaning

    இப்போதெல்லாம் வீட்டை அழகாக காட்ட தரைக்கு பல வகையான டைல்ஸ் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் பட்ஜெட் மற்றும் தேவையை பொறுத்து சிம்பிள் டைல்ஸ்களை தேர்வு செய்கின்றனர். பெரிய பெரிய வீடுகளில் டிசைனர் டைல்ஸ் கற்கள் ஒட்டப்படுகின்றன. இந்த இரண்டு டைல்ஸ்களை தவிர பாத்ரூம், பால்கனி பகுதியில் பலரும் மொசைக் கற்களை தேர்ந்தெடுக்கின்றனர். 

    மொசைக் தரை பட்ஜெட்டில் முடிய கூடியதாக இருந்தாலும் இதில் அழுக்கு படிந்து விட்டால் அதை சுத்தம் செய்வது சற்று கடினம். ஏனெனில் மொசைக் தரையில் வெவ்வேறு வகையான குட்டி கற்கள் பொதிக்கப்பட்டு சற்று கடினமாக இருக்கும். 

    முதலில் செய்ய வேண்டியது

    மொசைக் டைல்ஸ் தரையை சுத்தம் செய்வது மிகவும் சுலபம். அதே நேரம் நீங்கள் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, மொசைக் டைல்ஸை சுத்தம் செய்வதற்கு முன் அதன் மேல் 1 முதல் 2 பக்கெட் தண்ணீரை ஊற்றி ஊற வைக்கவும்.சிறிது நேரம் ஊறிய பின்பு டைல்ஸ் மென்மையாகும், அதன் பின்பு தரையை  கழுவி சுத்தம் செய்யவும்.

    பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள்

    இதற்கு முன்பு பேக்கிங் சோடாவை பல விஷயங்களுக்கு பயன்படுத்தி இருப்பீர்கள். பேக்கிங் சோடாவை கொண்டு பல பொருட்களை சுத்தமும் செய்து இருப்பீர்கள். ஆனால் இதை வைத்து மொசைக் தரையையும் சுத்தம் செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கான வழிமுறைகள் இதோ:

    • முதலில் 1-2 லிட்டர் தண்ணீரை சூடுப்படுத்தி வெதுவெதுப்பாக எடுத்து கொள்ளவும்.
    • இப்போது அதில் 2-3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
    • இதன் பின்பு இந்த கலவையை மொசைக் தரையில் ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் ஊற விடவும்.
    • இப்போது தரையை பிரஷ் அல்லது மாப்பை கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்யவும்.
    • அழுக்கு படிந்த உங்கள் வீட்டு மொசைக் தரை இப்போது பளபளக்கும். 

     

    home tips

    ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்துங்கள்

    • •ஹைட்ரஜன் பெராக்சைடு திரவமானது அழுக்கு, கறை படிந்த மொசைக் தரையை சுத்தம் செய்யக்கூடிய மிகச் சிறந்த பொருள். இதை பயன்படுத்தி, மொசைக் தரையில் இருக்கும் எந்த வகையான கறையையும் எளிதில் அகற்றலாம். அதற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:
    • முதலில் 1-2 லிட்டர் தண்ணீரில் 3-4 டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்சைடு திரவத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
    • தண்ணீரில் திரவத்தை கலந்து பின்பு சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
    • பின்பு இந்த கலவையை மொசைக் தரையில் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற விடவும். 
    • இறுதியில் பிரஷ் அல்லது துடைப்பத்தை கொண்டு தரையை நன்கு தேய்த்து கழுவி விடவும். 
     
     
     
     
     
     
     
     

    போராக்ஸ் பவுடரை பயன்படுத்துங்கள்

    • போராக்ஸ் பவுடர் சாதாரண டைல்ஸ் முதல் டிசைனர் டைல்ஸ் வரை சுலபமாக அனைத்தையும் சுத்தம் செய்யக்கூடியது. இந்த வழிமுறைகளை பின்பற்றி மொசைக் தரையை சுத்தம் செய்யவும். 
    • முதலில் மொசைக் தரையில் 1-2 லிட்டர் தண்ணீரை ஊற்றவும்.
    • இப்போது போராக்ஸ் பவுடரை தரையில் தெளித்து துடைப்பம் உதவியுடன் அது தண்ணீரில் சேரும்படி கலந்து விடவும். 
    • இப்படியே சுமார் 10 நிமிடங்களுக்கு போராக்ஸ் பவுடரை தரையில் ஊற விடவும். 
    • பின்பு பிரஷ் அல்லது துடைப்பம் கொண்டு தரையை நன்கு தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவி விடவும். 
    • உங்களுக்கு விருப்பம் இருந்தால் வெதுவெதுப்பான நீரில் போராக்ஸ் பவுடரை கலந்து அதை மொசைக் தரையில் ஊற்றியும் தரையை சுத்தம் செய்யலாம். 

    இந்த டிப்ஸ்களையும் பின்பற்றுங்கள்

    மொசைக் தரையை சுத்தம் செய்ய நீங்கள் பல பொருட்களை பயன்படுத்தலாம். உதாரணமாக, வினிகர், சோப்பு தூள், டைல்ஸ் கிளீனர் அமிலம் மற்றும் அம்மோனியா ஆகியவற்றை கொண்டும் அழுக்கு படிந்த மொசக் தரையை பளிச்சென்று மாற்றலாம்.

     

     

    இந்த பதிவும் உதவலாம்: அரிசி மாவில் பூச்சி வந்துவிட்டதா? இந்த 3 டிப்ஸ் மூலம் எளிதில் அகற்றலாம்

     

     

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

     Images Credit: freepik

    பொறுப்புத் துறப்பு

    உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com