Women Freedom Fighters : இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட வீரமங்கைகள்!

ஆண்களுக்கு நிகராக நின்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சில முக்கிய பெண்களை பற்றி இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்…

freedom fighters female india

நிகரற்ற தைரியம், நெகிழ்ச்சி மற்றும் வலிமை வாய்ந்தவர்கள் இந்திய பெண்கள். இவர்கள் பல பெண்களுக்கு முன்னோடியாக இருக்கிறார்கள். சுயமாக சம்பாதித்து வாழ்வது முதல் நீதிக்காக சமத்துவமின்மைக்காக போராடுவது வரை, பெண்களால் முடியாதது எதுவுமே இல்லை. ஆனால் அவர்கள் செய்யும் செயல்களுக்கு நன்மதிப்பையோ பாராட்டுக்களையோ எப்போதும் பெறுவதில்லை.

சமூகத்தில் நடக்கும் ஒழுக்க கேடுகள் மற்றும் தீமைகளை பொருட்படுத்தாமல் கடினமாக உழைத்து நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள் பெண்கள். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி 77 வது சுதந்திர தினத்தை கொண்டாட போகிறோம். நமக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நன்றி செலுத்த வேண்டிய நேரமிது. உலகம் போற்ற மறந்த சில பெண் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய விவரங்களை இன்றைய பதிவில் காணலாம்.

மேடம் பிகாஜி காமா

freedom fighters women ()

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் மேடம் பிகாஜி காமா அவர்கள். இவர் ஜெர்மனியில் இந்தியக் கொடியை ஏற்றியதற்காக அறியப்பட்டவர். பின்னர் அவர் தனது துணிச்சலான முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளுக்காக 'இந்திய புரட்சி தாய்' என்று போற்றப்பட்டார். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் தன் தாய் நாட்டிற்காக அர்ப்பணித்த பிகாஜி அவர்கள் 1935 இல் மாரடைப்பு காரணமாக காலமானார்.

சரோஜினி நாயுடு

freedom fighters women ()

இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு அவர்கள் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவர் ஆவார். அவர் தனது அசாதாரண கவிதைகள் மற்றும் பேச்சுகளால் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் 1925 இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். மேலும் கிலாபத் இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் முக்கிய பங்காற்றினார்.

பேகம் ஹஸ்ரத் மஹால்

freedom fighters women ()

இவர் முதல் சுதந்திரப் போரின் போது மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டவர் மற்றும் தந்தியா தோப்பே, நானா சாஹேப் ஆகியோருடன் பணிபுரிந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் இவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில், 1984 ஆம் ஆண்டு தபால் ஒன்றை இந்திய அரசு வெளியிட்டது.

அருணா ஆசப் அலி

freedom fighters women ()

அருணா ஆசப் மற்றொரு சிறந்த பெண் சுதந்திரப் போராளி ஆவார், அவர் காங்கிரஸ் கட்சியின் நன்கு அறியப்பட்ட உறுப்பினராக இருந்ததன் மூலம் முரண்பாடுகளை மீறி ஆங்கிலேயர்களுக்கு எதிராக நின்றார். அவர் மகாத்மா காந்தியுடன் அரசியல் அணிவகுப்புகளிலும் உப்பு சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார். ஆசப் அலி அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார் மற்றும் சுதந்திர இயக்கத்தின் மூதாட்டி என்றும் அறியப்பட்டார்.

உஷா மேத்தா

freedom fighters women ()

காங்கிரஸ் வானொலியை இயக்கியவர் உஷா மேத்தா. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இவரின் ஈடுபாடும் குறிப்பிடத்தக்கது. மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது, முறையாக போராட்டங்களை ஏற்பாடு செய்து, அவற்றை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

விஜய லட்சுமி பண்டிட்

freedom fighters women ()

இவர் மோதிலால் நேருவின் மகள். காங்கிரஸ் கட்சியின் புகழ்பெற்ற தலைவராக பதவி வகித்த தைரியமான பெண்மணி இவர். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதற்காக 1940 இல் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். பின் 1942 இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் முக்கிய பங்காற்றினார். சுதந்திரத்திற்குப் பிறகு வெளிநாடுகளில் நடைபெற்ற மாநாடுகளுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாகவும் இருந்தார்.

இந்த பதிவும் உதவலாம்: உலகின் தலை சிறந்து பொறுப்பில் இருக்கும் பெற்றோர்களுக்கு உலக பெற்றோர் தின வாழ்த்துக்கள்!

சுதந்திர தினத்தன்று சுதந்திரத்திற்காக போராடிய வீர மங்கைகளை நினைவு கூறுவோம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP