herzindagi
global day of parents wishes

Global Parents Day Wishes : உலகின் தலை சிறந்து பொறுப்பில் இருக்கும் பெற்றோர்களுக்கு உலக பெற்றோர் தின வாழ்த்துக்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி உலக பெற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. பெற்றோர்களின் அர்ப்பணிப்புகளுக்கான ஒரு அடையாளமாக இந்நாள் அறிவிக்கப்பட்டுள்ளது…
Editorial
Updated:- 2023-06-02, 09:41 IST

பிரசவம் பெண்களுக்கு மறுபிறவி என்றால், ஆண்களுக்க மறுஅத்தியாயம்! குழந்தை தரித்த கனம் முதல், குழந்தையை கையில் ஏந்தும் தருணம் வரை அச்சம் கலந்த மகிழ்ச்சியுடனே நாட்கள் நகரும். நாட்களை எண்ணி, மாதங்களைக் கடந்து குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது பிறப்பது குழந்தை மட்டுமல்ல, பொறுப்பான பெற்றோர்களும் தான். தனக்காக வாழ்ந்த நாட்களை மறந்து குழந்தை பிறந்த நொடி முதல் குழந்தைக்காகவே வாழந்து, அவர்களின் எதிர்காலத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்!

குழந்தையை 10 மாதம் சுமப்பது பெண்ணாக இருக்கலாம், ஆனால் தன் உயிரை சுமக்கும் பெண்ணையும் சேர்த்து சுமப்பவர்கள் ஆண்கள். குழந்தை பிறந்து கையில் வாங்கிய தருணத்தில் அளவுகடந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் இருக்கும். ஆனால் குழந்தையை வளர்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு பெண் மட்டுமே குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற நிலை மாறி உள்ளது. குழந்தை வளர்ப்பில் ஒன்றிணைத்து மனதார பங்களிக்கும் பெற்றோர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

இந்த பதிவும் உதவலாம்: தாயை நேசிக்கும் எந்த பெண்ணாலும் இப்பதிவை கண்ணீர் சிந்தாமல் படிக்க முடியாது!

பெற்றோறாக நீங்கள் கடந்து வந்த பாதையை சற்று நினைவு கூறுவோம்…

global parents day wishes

  • குழந்தை பிறக்கப்போகும் தேதியை மருத்துவர்கள் அறிவித்து இருந்தாலும், ஊர் சொல்ல உலகம் சொல்ல 1 மாதம் முன்னரே பயம் வந்து விடும். இந்த பொழுதில் நாட்களை கடத்துவது சற்று கடினம் தான்.
  • இறுதியாக தேதி நெருங்க நெருங்க பயம் கலந்த அந்த மகிழ்ச்சியான உணர்வை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
  • பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரியாமலேயே டயப்பர் முதல் உடை வரை வாங்கி வைத்து காத்திருந்த நாட்கள் அழகானவை.
  • குழந்தை பிறந்த நாளை எந்த ஒரு பெற்றோராலும் மறந்து விட முடியாது. அந்த சிறு உயிரை சுற்றியே நம் முழு உலகமும் சுழலும்.
  • குழந்தையை தூக்க தெரியாமல் தூக்கி, தாய் பால் கொடுப்பதில் கூட சிரமங்களை எதிர்கொண்ட பெண்கள் ஏராளம். எப்போதும் தூங்கும் குழந்தையை ரசித்தப்படியே பெற்றோர்களின் நாட்கள் நகரும். எப்போது விழிப்பார்கள் என்று ஏங்கும் ஆரம்ப கால நாட்கள் இது.
  • அழுவதற்கான காரணம் புரியாமல் நாமும் சேர்ந்து அழுத நாட்கள் உண்டு. தொட்டிலை ஆட்டிப்படியே இரவு தூக்கத்தை தொலைத்த நாட்களும் உண்டு. நடு இரவில் குழந்தை மலம் கழிக்கும் பொழுது சலிக்காமல் டயப்பர் மாற்றிய நாட்களும் உண்டு.
  • நாம் தூங்கும் நேரம், சாப்பிடும் நேரம் எப்படி தான் தெரியுமோ குழந்தைகளுக்கு, முழு உணவை முடித்ததில்லை, ஒரு இரவும் முழுசாக தூங்கியதில்லை. இருப்பினும் குழந்தை மீதான அன்பு மட்டும் குறையவில்லை.
  • குழந்தை தவள, நடக்க, பேச மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு புறம் குழந்தை சீக்கிரம் வளருகிறார்களே என்ற ஏக்கம் எல்லா பெற்றோர்களுக்கும் இருக்கும்.
  • குழந்தையின் படிப்பு, எதிர்காலாம் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர்களுக்காகவே இன்றைய நாள் கொண்டாடப்படுகிறது.

குழந்தைக்கு கஷ்டம் தெரியாமல் வளர்க்க ஆசைப்படவேண்டாம், எல்லா சூழலும் தன்னை சமாளிக்க கற்றுக்கொடுங்கள். ஆண், பெண் என வேறுபாடு இன்றி எல்லா பிள்ளைகளுக்கு வீட்டு வேலைகளையும் சொல்லி கொடுங்கள். நாளைய சமுதாயம் உங்கள் கையில், குழந்தையை வளர்க்கும் பொறுப்பை சிறப்பாக செயலாற்றும் உங்கள் அனைவருக்கும் உலக பெற்றோர் தின நல்வாழ்த்துக்கள்!

இந்த பதிவும் உதவலாம்: கிச்சன் சிங்க்கில் வீசும் நாற்றத்தை விரட்டுவது எப்படி?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com