Mother's Day Wishes : தாயை நேசிக்கும் எந்த பெண்ணாலும் இப்பதிவை கண்ணீர் சிந்தாமல் படிக்க முடியாது!

உலகெங்கிலும் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள். கண்ணீர் சிந்தாமல் பதிவை படித்து முடிக்க முயற்சிப்போம்…

mothers day wishes for mom and daughter

'அம்மா' இந்த ஒரு சொல்லில் பெண்களின் முழு உலகமே அடங்கி விடும். 10 மாதம் என்னை மகிழ்ச்சியாக சுமந்தவள் நீ, பிரசவ வலி கொடியது என தெரிந்தும் என்னை வரவேற்க தயாரானவள் நீ, உயிர் உள்ள வரை எனக்காக மட்டும் வாழும் ஒரே உயிர் நீ. ஆண், பெண் என ஒரு தாய் என்றுமே வேறுபாடுகள் பார்ப்பதில்லை. இருப்பினும் பெண் குழந்தைகள் பிறந்த வீட்டில் இருக்கும் வரை, கஷ்டம் தெரியாமல் இளவரசிகளாகவே வளர்க்கப்படுகிறார்கள்.

இருந்த இடத்தில் உணவு, காலை 9 மணிவரை தூக்கம், வேலையே செய்யா விட்டாலும் இருந்த இடத்திலேயே 3 வேளை சாப்பாடு, தலை வலி என்றவுடன் சூடான காபி/ டீ, வேண்டியதை கேட்காமலே புரிந்து கொள்ளும் மனசு. ஏனோ பெண் என்பதால் என்னவோ, தன்னுடன் இருக்கும் வரை தன் மகள் நிம்மதியாக இருக்கட்டும் என்ற எண்ணம் எல்லா தாய்க்கும் இருக்கும். திருமணத்திற்கு பின் இது எதுவும் உறுதியில்லையென புரிந்தவர் அம்மா. ஆனால் ஏனோ தாயுடன் இருக்கும் வரையில் எந்த மகள்களும் இதை புரிந்து கொள்வதே இல்லை.

திருமணம் ஆன நாள் முதல் குழந்தையை வளர்க்கும் ஒவ்வொரு தருணத்தில் நிச்சயமாகத் தாயின் அருமை புரியும். அப்படி ஒரு பெண்ணாக என் அம்மாவை நினைத்துக் கொண்ட தருணங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். இதில் ஒரு சில தருணங்கள் உங்கள் வாழ்விலும் நடந்து இருக்கும் என நம்புகிறேன்.

mothers day message

  • வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்ட பின்பும், பசியுடன் இருக்கும் எனக்கு நானே தோசை ஊற்றி சாப்பிட்ட போது.
  • காய்ச்சல் என்றாலும் மருந்துகளை சாப்பிட்டு வீட்டு வேலைகளை செய்த போது.
  • பிள்ளைகளை வளர்க்கும் பொழுது இரவு தூக்கத்தை தொலைத்த போது.
  • விடுமுறை இல்லாமல் வீட்டு வேலைகளை செய்யும் போது.
  • உணவின் அளவு தெரியாமல் சமைத்த நாட்களில், சாப்பிடாமல் நான் தூங்கிய போது.
  • சூடாக யாராவது காஃபி போட்டு தர மாட்டார்களா என்று ஏங்கிய போது.
  • அம்மாவை நேரில் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று எண்ணினாலும் அருகில் இல்லாத போது.
  • என் பிள்ளைகளுக்கு நான் சோறு ஊட்டும் பொழுது, எனக்காக நீ இல்லாத போது.
message for mothers day

பிரசவத்திற்கு பிறகு காலை தரையில் ஊன்ற முடியாத நிலையிலும், என்னையும் என் பிள்ளையையும் சேர்த்து கவனித்து கொண்டவள் நீ. நான் தூங்க பல இரவுகள் விழித்திருந்து என் பிள்ளையை பார்த்தவள் நீ. என்னதான் கணவன் கவனித்து கொண்டாலும், அம்மா அம்மா தான். பெண்களுக்கு என்றுமே அம்மா வீடு தான் சொர்க்கம்.

இத்தனையும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் அம்மாக்கள் எதிர்பார்ப்பது பிள்ளைகளின் சந்தோஷம் மட்டும் தான். இந்த அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை எவ்வளவு பிடிக்கும் என்று வெளிப்படுத்துங்கள். இதை விட உங்கள் அம்மாவுக்கு ஒரு சிறந்த பரிசு இருக்கவே முடியாது. மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

இந்த பதிவும் உதவலாம்: சந்திர கிரகணத்தன்று கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய 9 விஷயங்கள் எவை தெரியுமா?

இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP