herzindagi
image

பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டிற்குப் பின்னால் இத்தனை சுவாரஸ்சியங்களா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

சாந்துப் பொட்டு, குங்குமப்பொட்டு, ஸ்டிக்கர் பொட்டு என பல வகைகளில் உள்ள பொட்டுகளை பெண்கள் வைப்பதால், அவர்களை அழகாக மட்டும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க உதவியாக உள்ளது.
Updated:- 2025-09-08, 14:10 IST

பொட்டு வைக்கும் பழக்கம் என்பது இந்திய கலாச்சாரத்தில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. குழந்தைப் பிறந்தது முதல் வயதாகும் வரை முகத்தில் பொட்டு இல்லையென்றால் பெண்கள் அழகாகத் தெரியமாட்டார்கள். அந்தளவிற்கு பொட்டுகளையும் பெண்களையும் பிரிக்க முடியாது. இன்றைக்கு நிலை முற்றிலும் மாறி விட்டது. மாடர்ன் கலாச்சாரம் என்கிற பெயரில் பெண்கள் சிறிய அளவிலான பொட்டுகள் கூட வைப்பதில்லை. ஒருவேளை வைத்தாலும் இரு புருவங்களுக்கு இடையில் வைப்பதில் இல்லை. நெற்றியில் இஷ்டத்திற்கு வைக்கிறார்கள். ஏன் நம்முடைய மூதாதையர்கள் காலத்தில் இருந்து நெற்றியில் பொட்டு வைக்கப்படுகிறது? இதனால் என்னென்ன நன்மைகளை பெண்கள் அடைந்தார்கள்? நெற்றியில் எப்படி பொட்டு வைக்க வேண்டும்? என முதலில் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: கடுமையான பணிச்சூழலிலும் வீட்டில் குழந்தையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட உதவும் குறிப்புகள்

நெற்றில் ஏன் பொட்டு வைக்க வேண்டும்?

  • நம்முடைய இரண்டு புருவங்களுக்கு மத்தியில் தான் பொட்டு வைக்க வேண்டும். நெற்றிப் பகுதியில் குறிப்பிட்ட புள்ளி ஒன்று உள்ளது. இவற்றை அழுத்தி பொட்டுகள் வைக்கும் போது நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் மேம்படும் என பல மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஸ்டிக்கர் அல்லது சாந்துப் பொட்டுகளை வைக்கும் போது ஏற்படும் அழுத்தம் மூளையில் செயல்திறனைத் தூண்டுகிறது.
  • இருபுருவங்களுக்கு இடையில் அழுத்தம் கொடுத்து பொட்டு வைக்கும் போது, அக்குபிரஷர் கொள்கையின் படி தலைவலியை சரியாக்குகிறது.


மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு கடினமாக இருக்கிறதா? பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்

  • நம்முடைய நெற்றிக்கும் கண்களுக்கு செல்லக்கூடிய நரம்புகளை அழுத்தம் கொடுத்து வைக்கும் போது கண் ஆரோக்கியம் மேம்படும்.
  • நெற்றிப்பொட்டியின் வழியாக காதுகளுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் கோக்லியர் நரம்பு செல்கிறது. பொட்டுகளை வைத்து லேசாக அழுத்தும் போது செவித்திறன் மேம்படுகிறது.
  • இத்தகைய ஆரோக்கியத்துடன் தினமும் பொட்டு வைப்பது பெண்களின் அழகை எப்போதும் கூடுதலாக காட்டுவதற்கு உதவியாகவும் உள்ளது.

women bindi

நெற்றியில் பொட்டு வைக்கும் முறைகள்:

  • குங்குமப் பொட்டு வைக்கிறீர்கள் என்றால் முதலில் பௌடரை முகத்தில் பூசிக் கொள்ளவும். அதையடுத்து பொட்டு வைக்கும் போது முகம் பொலிவுடன் இருக்கும்.
  • குழந்தைகளுக்கு கண் இமை பொட்டு வைக்கிறீர்கள் என்றால், முதலில் பவுடரை லேசாக வைத்துக் கொள்ளவும். பின்னர் பொட்டு வைத்துவிட்டு கொஞ்சம் பவுடர் பூசிக் கொள்வது நல்லது. இதனால் குழந்தைகளுக்கு கண் மை பொட்டால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பில்லை.

மேலும் படிக்க: பெற்றோர் கவனத்திற்கு.. ஆட்டிசம் குழந்தைகளை பராமரிக்க உதவும் 4 டிப்ஸ்!

  • குங்குமப் பொட்டு மற்றும் சாந்து பொட்டு வைக்கும் பழக்கம் குறைந்து விட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்கள் விரும்பும் வகையிலான ஸ்டிக்கர் பொட்டுக்களை வைக்கிறார்கள். அதிலும் இன்றைக்கு பெண்கள் விரும்பும் வகையில் பல டிசைன்களிலும் பொட்டுகள் வந்துவிட்டது. இதை வைப்பது தவறில்லை. அதே சமயம் ஒரு நாளைக்கு மேல் உபயோகிக்கக்கூடாது. ஒரே பொட்டை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்தால் தோல் அலர்ஜி ஏற்பட்டுவிடும். பிராண்டட் பொட்டுக்களை வைப்பது நல்லது.
  • எப்போது பொட்டு வைத்தாலும் ஒரே இடத்தில் வைத்தல் கூடாது. நெற்றியில் கீழ், வலது, இடது என கொஞ்சம் நகர்த்தி வைப்பதால் தோலில் அரிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.

 Image credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com