herzindagi
image

Jowar millet benefits: கூந்தல் ஆரோக்கியம் முதல் செரிமானம் வரை சோளத்தினால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

Jowar millet benefits: தானிய வகைகளில் சோளத்திற்கு அதிகப்படியான சத்துகள் உள்ளன. அதன்படி, செரிமானம் முதல் சரும ஆரோக்கியம் வரை சோளத்தில் இருக்கக் கூடிய பல்வேறு நன்மைகளை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த சோளம் உதவியாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-09-29, 14:07 IST

Jowar millet benefits: சோளம் ஒரு முழு தானியமாக கருதப்படுகிறது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. செரிமானம், இருதய ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றம் (Metabolism) ஆகியவற்றுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் சோளம் வழங்குகிறது. இதன் முக்கியமான சில நன்மைகளை பார்க்கலாம்.

மேலும் படிக்க: World heart day: உங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமானால் இந்த உணவுகளை நீங்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்

 

செரிமானத்திற்கு உதவும்:

 

சோளத்தில் உள்ள அதிக நார்ச்சத்து சீரான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. மேலும், மலச்சிக்கலை தடுக்கிறது. இவை தவிர ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளை (Gut Microbiome) ஊக்குவிக்கிறது. இதில் உள்ள கரையாத நார்ச்சத்து, செரிமான பாதையை இயற்கையாகவே நச்சு நீக்கம் (Detoxify) செய்கிறது.

Jowar benefits

 

சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும்:

 

சோளத்தின் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (Low Glycemic Index - GI) குளுக்கோஸ் உறிஞ்சுதலை தாமதப்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது. எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்த உணவாகும்.

 

இருதய ஆரோக்கியம்:

 

ஃபீனாலிக் கலவைகள் போன்ற அன்டிஆக்சிடென்ட்ஸ் ஆகியவை சோளத்தில் நிறைந்துள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை (Oxidative Stress) எதிர்த்து போராடுகின்றன. இது வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும், கெட்ட கொழுப்பையும் (LDL) குறைக்கின்றன. இதன் மூலம் இருதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

மேலும் படிக்க: மழைக்காலத்தில் மூக்கடைப்பு, சைனஸ் தொல்லையா? இதோ எளிய தீர்வுகளும், தடுப்பு முறைகளும்!

 

உடல் எடை குறைப்பு:

 

சோளத்தில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால், இது நீண்ட நேரம் வயிறை நிறைவாக வைத்திருக்கும். மேலும், இது மெதுவாக செரிமானம் ஆகும் கார்போஹைட்ரேட்டுகளை கொண்டிருப்பதால், திடீர் பசி உணர்வை தடுத்து, நிலையான உடல் எடை குறைப்பு முயற்சிகளுக்கு உதவுகின்றன.

 

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

 

சோளத்தில் டானின்கள், ஃபீனாலிக் அமிலங்கள் மற்றும் ஆந்தோசயனின்கள் போன்ற கலவைகள் உள்ளன. இவை முதுமை தோற்றத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. இந்தக் கலவைகள் கொலஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பராமரித்து, இளமை மற்றும் பளபளப்பான தோற்றத்தை அளிக்கின்றன.

Sorghum benefits

 

கூந்தல் ஆரோக்கியம்:

 

சோளத்தில் இரும்பு மற்றும் சின்க் இருப்பதால், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதன் மூலம் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் குறைக்கப்படுகின்றன.

 

இவ்வளவு நன்மைகள் கொண்ட சோளத்தை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை சரியான முறையில் எளிதாக பராமரிக்கலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com