அன்றாடம் பணிக்கு செல்லும் பெண்களுக்கு குழந்தையை கவனிக்க தனி நேரம் ஒதுக்குவது சவாலான காரியமாகும். குடும்பத்தலைவியாக ஒரு பெண் அலுவலக பணிக்கு பிறகு வீட்டையும், குழந்தையையும் கவனிக்கவே செய்கிறாள். வீடு திரும்பியதும் குழந்தையுடன் விளையாடி பாடம் சொல்லிக் கொடுப்பது சிரமமே. தாயாக தனது குழந்தையை நன்றாக கவனித்து கொள்கின்றேனா என்ற வருத்தம் ஏற்படும். குழந்தை வளர்ப்பு எளிதானது அல்ல. குழந்தையின் எதிர்கால நலனுக்காக அலுவலக பணிக்கு செல்லும் தாய் எப்படி குழந்தையுடன் ஆக்கப்பூர்வமாக நேரத்தை செலவிடுவது என சில குறிப்புகள் இந்த கட்டுரையில் பகிரப்பட்டுள்ளது.
குழந்தையுடன் நேரம் செலவழித்தல்
அற்புதமான காலை
காலையில் சற்று சீக்கிரமாக எழுந்து அலுவலக பணிக்கு செல்லும் முன்பாக குழந்தையுடன் சிறிது நேரம் செலவிடவும். குழந்தைக்கு காலை உணவு கொடுப்பது, பள்ளிக்கு கிளப்புவது, பள்ளி வாசலில் குழந்தையை இறக்கிவிட்டு கட்டி அணைத்து முத்தமிட்ட பிறகு அலுவலக பணிக்கு செல்வதாக அன்பை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடையவும்.
குழந்தையுடன் உரையாடல்
மாலை நேரத்தில் குழந்தை பள்ளியில் இருந்து வந்த பிறகு தொலைபேசியில் உரையாடவும். அலுவலக பணிக்கு இடையே 10 நிமிடம் ஒதுக்கி பள்ளியில் இன்றைய நாள் எப்படி இருந்தது ? கொடுத்த உணவை சாப்பிட்டு முடித்தாயா ? எனக் கேட்கவும். இந்த சிறிய உரையாடல் கூட இருவரின் பிணைப்பை அதிகரிக்கும்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்
குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வீடியோ கால் உதவுகிறது. அலுவலகத்தில் இருந்தாலும் குழந்தையுடன் பேசுவதை யாரும் கண்டிக்க மாட்டார்கள்.
இருவருக்கான நேரம்
நீங்கள் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகு இருவரும் செல்போன், டிவி மற்றும் இதர எலக்ட்ரானிக் கருவிகளில் இருந்து விலகி நேரத்தை செலவிடவும். ஒன்றாக விளையாடுங்கள், புத்தம் படித்து கதை சொல்லுங்கள் அல்லது பிடித்ததை பேசுங்கள்.
கூட்டு செயல்பாடு
வீட்டு வேலைகளில் குழந்தையின் பங்களிப்பை உறுதி செய்யவும். துணி மடிப்பது, சமையலறையில் சின்ன சின்ன விஷயங்களை சொல்லிக் கொடுப்பது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற அறிவுறுத்துவது என பொறுப்பை உணரச் செய்யுங்கள்.
குழந்தைக்கு பிடித்த விஷயத்தில் கவனம்
குழந்தைக்கு எது பிடிக்கும் என தெரிந்து கொண்டு அதில் நீங்களும் ஈடுபாடு காட்டுங்கள். அவர்களுக்கு பிடித்ததை நீங்களும் செய்யும் போது மகிழ்ச்சியாக உணர்வார்கள்.
வார விடுமுறை கொண்டாட்டம்
வாரத்தில் கிடைக்கும் விடுமுறை நாளில் இருவரும் சேர்ந்து வெளியே செல்லுங்கள். முன்கூட்டியே திட்டமிட்டு வார விடுமுறையை கொண்டாடி மகிழவும். அதே போல தினமும் அரை மணி நேரம் வெளியே இருவரும் ஒன்றாக செல்ல முயற்சிக்கவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation