பெண்களுக்கு நீளமாக கூந்தல் இருப்பது எப்போதுமே அவர்களை மிகவும் அழகாகக் காட்டும். மன அழுத்தம், வெயிலின் தாக்கம், முறையற்ற தலைமுடி பராமரிப்பு போன்ற பல காரணங்களால் பெண்களுக்கு இளம் வயதிலேயே முடி கொட்டுதல் பிரச்சனை மட்டுமல்ல சீக்கிரமே தலைமுடி வயதானவர்கள் போன்று நரைத்துவிடுகிறது. இதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று விலையுயர்ந்த கெமிக்கல் நிறைந்த ஹேர் டைகளை உபயோகிப்பார்கள். தொடர்ச்சியாக உபயோகிக்கும் போது உடல் ஆரோக்கியம் கெட்டு விடும். இவற்றிற்குத் தீர்வு காண வேண்டும் என்றால் வீட்டிலேயே ஹேர் டை செய்யலாம். அதிலும் தேங்காய் சிரட்டையைக் கொண்டு செய்ய முடியும் தெரியுமா? இதோ அதற்கான டிப்ஸ் இங்கே.
இளநரையைப் போக்கும் ஹேர் டை:
பெண்கள் கறிவேப்பிலை, மருதாணி, அவுரி, கரிசலாங்கண்ணி போன்ற இயற்கையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி தங்களுடைய தலைமுடியின் பாதிப்பைப் பாதுகாத்து வருகிறார்கள். இந்த வரிசையில் இளநரைப் போக்கவும், கருமையான கூந்தலைப் பெறவும் எப்படி தேங்காய் சிரட்டை கரித்தூள் உபயோகமாக உள்ளது? எப்படி வீட்டிலேயே எளிமையாக இதை தயாரிக்கலாம்? என்பது குறித்த இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- தேங்காய் சிரட்டை - 1
- வசம்பு - 1
- விளக்கெண்ணெய் - 50 கிராம்
- தேங்காய் எண்ணெய் - 50 கிராம்.
செய்முறை:
- இயற்கையான ஹேர் டை செய்வதற்கு முதலில் தேங்காய் சிரட்டை மற்றும் வசம்பு இரண்டையும் தனித்தனியே தீயில் சுட்டு கரியாக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் மிக்ஸி ஜார் அல்லது அம்மியில் போட்டு இரண்டையும் பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
- இதையடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் சமமான அளவிற்கு விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க:கருப்பான உதடுகளுக்கு குட் பை சொல்லணுமா? அப்ப இதை மட்டும் பாலோ பண்ணுங்க
- இதனுடன் பொடியாக்கி வைத்துள்ள தேங்காய் சிரட்டை மற்றும் கரித்தூள் இரண்டையும் ஒன்றாக கலந்தால் போதும். இயற்கையான முறையில் இளநரைக் குணமாக்கும் ஹேர் டை தயாராகிவிட்டது.
- இந்த கலவையை நரைமுடி தெரியக்கூடிய இடங்களில் நன்கு அப்ளை செய்யவும். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தலை அலசினால் போதும். நரைமுடி பிரச்சனை இனி இருக்க வாய்ப்பே இல்லை.
இதுபோன்று இயற்கையான முறையில் செய்யப்படும் ஹேர் டை நரைமுடி பிரச்சனைக்கு மட்டும் தீர்வாக அமையாது. விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதால் கூந்தல் வளர்ச்சிக்கும் பேருதவியாக உள்ளது. பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் மாதத்திற்கு ஒருமுறையாவது இந்த ஹேர் டையைப் பயன்படுத்தலாம்.
இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்கள். மேலும் இதுபோன்று பெண்களுக்கான பிரத்யேக கட்டுரைகளைப் படிக்க https://www.herzindagi.com/tamil வுடன் இணைந்திருங்கள்.
Image Credit - Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation