herzindagi
image

கொத்தமல்லி இலைகளில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கா? இப்ப தெரிஞ்சுக்கலாம் வாங்க!

வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள கொத்தமல்லி இலைகளை அதிகளவில் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது செரிமானம் முதல் கண் பார்வை பிரச்சனை போன்றவற்றை சரி செய்கிறது.
Editorial
Updated:- 2025-09-28, 23:22 IST

தனியா என்றழைக்கப்படும் கொத்தமல்லி ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கும் அத்தியாவசிய உணவுப்பொருள்களில் முக்கியமானது. இதன் இலைகள் முதல் காய்ந்த விதைகள் அதாவது வர கொத்தமல்லியை பல வகைகளில் நம்முடைய சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். உணவிற்கு ருசியை அளிப்பதோடு உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது. அவை என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

மேலும் படிக்க: சிறுநீர்ப்பாதை தொற்றை குணப்படுத்தும் எளிய வீட்டு வைத்திய முறைகள்; இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்


உடலுக்கு ஆற்றல் தரும் கொத்தமல்லி இலைகள்:

உடலின் நோய் எதிர்ப்பு எப்போதெல்லாம் குறைகிறதோ? அப்பொழுதெல்லாம் நம்முடைய உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் வருகிறது. இவற்றை எப்போதும் வலுவுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு தீர்வாக அமைகிறது கொத்தமல்லி இலைகள். ஆம் கொத்தமல்லியில் உள்ள வைட்டமின் சி வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி பண்புகள் இரத்த வெள்ளையணுக்கள் சிறப்பாக செயல்பட செய்து எவ்வித நோய் தாக்குதல் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

  • வைட்டமின் ஏ, வைட்டடமின் சி மற்றும் கரோனாயிட்டுகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இளம் வயதில் ஏற்படக்கூடிய கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
  • கொத்தமல்லியில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி செரிமானம் சீராக இயங்க உதவுகிறது. இதோடு உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் குறைத்து உடல் எடையை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

மேலும் படிக்க: கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவது முதல் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது வரை; நெல்லிக்காயில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்

இன்றைக்கு ஆண்கள் முதல் பெண்கள் வரை கீல்வாதம் மற்றும் மூட்டு வலி பிரச்சனையால் அவதிக்குள்ளாகின்றனர். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. இதோடு மட்டுமின்றி இதய ஆரோக்கியம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைச் சரி செய்ய உதவுகிறது.

Image Source - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com