herzindagi
image

பெற்றோர் கவனத்திற்கு.. ஆட்டிசம் குழந்தைகளை பராமரிக்க உதவும் 4 டிப்ஸ்!

உங்கள் குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்க பட்டிருந்தால் அவர்களை எப்போதும் கூடவே இருந்து எக்ஸ்ட்ராவாக கேர் பண்ணுங்க. இந்த நிலையில் ஆட்டிசம் குழந்தைகளை பராமரிக்க உதவும் சில பெற்றோருக்கான டிப்ஸ் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2025-03-19, 15:46 IST

ஆட்டிசம் (ASD) என்பது குழந்தைகளை பாதிக்கும் ஒரு வித நரம்பியல் வளர்ச்சி கோளாறு ஆகும். சமீப காலங்களில் இந்தியாவில் பிறக்கும் 100 இல் 10 குழந்தைக்கு இந்த ஆட்டிசம் இருப்பது மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பது பெற்றோர்களின் கடமை. அதிலும் குறிப்பாக ஆட்டிசம் குழந்தைகளை இன்னும் அதிக பாசத்துடன் பார்த்து கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்க பட்டிருந்தால் அவர்களை எப்போதும் கூடவே இருந்து எக்ஸ்ட்ராவாக கேர் பண்ணுங்க. இந்த நிலையில் ஆட்டிசம் குழந்தைகளை பராமரிக்க உதவும் சில பெற்றோருக்கான டிப்ஸ் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஆட்டிசம் என்றால் என்ன?


ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு என்பது குழந்தை பருவத்தில் ஏற்படும் நரம்பியல் வளர்ச்சி கோளாறு. இந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட சற்று வித்தியாசமாக செயல் படுவார்கள். பொதுவாகவே இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அதிக ஆர்வம் காட்டமாட்டார்கள். இந்த குழந்தைகளுக்கு ஒளி ஒலிக்கு அதிக உணர்திறன் இருக்கும். அதே போல சுவையிலும் அதிக உணர்திறன் இருக்கலாம். மற்ற குழந்தைகளை போல மகிழ்ச்சியாக அதிகம் பேச மாட்டார்கள். இவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லி புரிய வைக்க நிறைய பொறுமை வேண்டும். நாம் கோபமாக திட்டினால் கூட அது அவர்களை அதிகம் பாதிக்கும். எனவே ஒரு ஆட்டிசம் குழந்தையை வளர்க்கும் போது அதிக பாசம் மற்றும் அன்பு நிச்சயம் தேவை. பெற்றோர்கள் இந்த ஆட்டிசத்தை குறையாக பார்க்காமல் அவர்களும் கடவுளின் படைப்பு என்று நினைத்தாலே போதும்.

குழந்தையுடன் நெருக்கமாக இருங்கள்:


உங்கள் குழந்தையோடு நெருக்கமாக இருப்பது மிகவும் முக்கியம். அவர்களுக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காது என்று தெரிந்து கொள்ளுங்கள், அவர்கள் பேசும் வார்த்தைகளை உன்னிப்பாக கவனித்து நினைவில் கொள்ளுங்கள். முக்கியமாக மிகவும் பொறுமையாக அவர்களை நீங்கள் கையாள வேண்டும். ஓப்பனாக அன்பு காட்டுங்கள், குழந்தையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

playing-with-toy-cars-and-trucks

சமூக நேரம் தேவை:


ஒரு சில பெற்றோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வெளியில் கூட்டி சென்றால் பார்த்துக்கொள்ள கஷ்டமாக இருக்கும் என்று அதிகமாக வெளியில் அழைத்து செல்ல மாட்டார்கள். ஆனால் இது தான் தவறு. மற்ற குழந்தைகளை போலவே இவர்களும் வெளியில் சென்று சமூகத்தை பார்க்க ஆசை படுவார்கள். இந்த குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போது தான் அவர்கள் இந்த சமூகத்தில் ஒன்றி வாழ உதவியாக இருக்கும். அவர்களுக்கு மற்றவர்களை பார்க்கும் போது பயம் போகும். எளிதில் மற்றவர்களுடன் பழக உதவும்.

பொழுதுபோக்கு நடவடிக்கைகள்:


உங்கள் குழந்தைகளை வீட்டிலேயே பூட்டி வைக்காமல் அவர்களின் ஆசைகளை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நடனம், கலை, இசை, விளையாட்டு போன்ற ஏதாவது ஒரு பொழுதுபோக்கு விஷயத்தில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். மற்ற குழந்தைகளை போலவே இவர்களுக்கும் கண்டிப்பாக திறமை இருக்கும். அதை வெளிக்கொண்டு வரவேண்டியது பெற்றோர் கடமை.

Awareness-for-Children-With-Autism

பாராட்டுக்களும் பரிசுகளும்:


உங்கள் குழந்தை ஒரு விஷயத்தை சரியாக செய்தால் அவர்களை பாராட்டுங்கள். இந்த ஆட்டிசத்தால் பாதிக்க பட்ட குழந்தைகளுக்கு இந்த பாராட்டு மகிழ்ச்சி தரும். அவர்கள் செயல்களை பாராட்டுங்கள், பிடித்த பொம்மைகளை வாங்கி கொடுங்கள் அல்லது அவர்களுக்கு பிடித்த உணவு சமைத்து கொடுக்கலாம். இது போல அவர்களின் செயல்களை பாராட்டி நீங்கள் பரிசு கொடுக்கும் போது அவர்கள் அதிக மகிழ்ச்சியாக உணர்வார்கள்.

மேலும் படிக்க: குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லி தரணுமா? இந்த 5 டிப்ஸ் ட்ரை செய்து பாருங்க

குழந்தையும் தெய்வமும் ஒன்று என கூறுவது போல பெற்றோர்களாக நீங்கள் உங்கள் குழந்தையை அதிக அன்பு பாசத்தோடு வளர்க்க வேண்டும். எது சரி எது தப்பு என்று சொல்லி கொடுக்க வேண்டும். குழந்தைகளை அடிக்காமல் திட்டாமல் அன்பாக எடுத்து சொல்லுங்க. அதே போல இந்த குழந்தைகளுக்கு பொறுமையாக புரிய வைக்க வேண்டும்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com