மழை வெள்ளத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமீர் கான் மீட்பு

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து இந்தி நடிகர் அமீர் கான், நடிகர் விஷ்ணு விஷால் அவரது காதலி ஜூவாலா கட்டா ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.

Main vv

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வீடுகள் அனைத்தையும் நீர் சூழ்ந்துள்ளது. பெருவெள்ளம் யாரையும் விட்டுவைக்கவில்லை. அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது. சாமானிய மக்கள் படும் இன்னல்களை தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் நடிகர் - நடிகைகளுக்கும் இதே நிலை தான். நடிகர் விஷால் தனது வீட்டிற்குள் ஒரு அடிக்கு மேல் நீர் வந்துவிட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஷ்ணு விஷால் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 vv

நான் வசிக்கும் காரப்பாக்கம் வீட்டில் தண்ணீர் புகுந்து வேகமாக உயர்ந்து வருகிறது. உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். நான் இருக்கும் இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை கிடைக்கவில்லை. செல்போன் சிக்னலும் இல்லை. மொட்டை மாடியின் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே எனக்கு ஓரளவு சிக்னல் கிடைக்கிறது. அதை வைத்தே இந்தப் புகைப்படங்களைப் பதிவிட முடிந்தது.

 vv

மேலும் படிங்கபருத்திவீரன் பிரச்சினையில் மிக்சர் சாப்பிடுகிறாரா சூர்யா ? - ரசிகர்கள்

என்னைப் போல் இங்குள்ள பலரும் எதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். சென்னை மக்களின் மனநிலையை தன்னால் நன்கு உணர முடிகிறது எனத் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். காரப்பாக்கம் பகுதி பள்ளிக்கரணை ஏரியை ஓட்டி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பேரிடர் மீட்பு குழு மூலம் தான் மீட்கப்பட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் காதலி ஜூவாலா கட்டா மற்றும் இந்தி நடிகர் அமீர் கான் ஆகியோரும் அதே வீட்டில் இருந்துள்ளனர். காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கி விட்டதாகவும், மூன்று படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மீட்பு பணியில் அயராது உழைக்கும் அதிகாரிகளுக்கு நன்றி கூறியுள்ளார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP