சமீப காலமாக, சீரற்ற தட்பவெப்ப நிலை, அதிகரித்து வரும் மாசுபாடு போன்ற காரணங்களால் தொற்று நோய்கள் வழக்கத்தைவிட அதிகமாக பரவி, நீண்ட நாட்களுக்கு பிரச்சனை ஏற்படுத்துவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். வானிலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு கூடுதல் அழுத்தத்தை அளித்து, பலரையும் தொற்று நோய்களுக்கு எளிதில் ஆளாக்குகின்றன.
மேலும் படிக்க: இளம் தலைமுறையினரிடம் அதிகரிக்கும் மாரடைப்பு அபாயம்; இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய வழிகள் இதோ
சுவாசக்குழாய் நோய்த்தொற்று, ஒவ்வாமை மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. பகலில் வெப்பம், இரவில் குளிர்ச்சியான வானிலை, அத்துடன் மாசுபாட்டின் தாக்கம் இவை அனைத்தும் வைரஸ் மற்றும் ஒவ்வாமை ஏற்பட காரணம் ஆகிறது.
கடுமையான தொண்டை வலி, லேசான காய்ச்சல் முதல் சோர்வு, தலைவலி, தொடர்ச்சியான இருமல் வரையிலான பருவகால வைரஸ் தொற்றுகளின் அறிகுறிகள் அதிகமாக காணப்படுகின்றன. இவை பல சந்தர்ப்பங்களில், ஆரம்பத்தில் குணம் அடைந்தாலும், மீண்டும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் வெப்பநிலை, சுவாசக்குழாயில் உள்ள இரத்த நாளங்களை சுருங்கவும், விரியவும் செய்வதால், இது சுவாச பாதையில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தூசி மற்றும் பிற மாசுபடுகள் சுவாச மண்டலத்தில் மேலும் அழற்சியை உருவாக்கி, ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை சார்ந்த மூச்சுக்குழாய் அழற்சியை அதிகப்படுத்துகின்றன. புகை மூட்டம் மற்றும் மோசமான காற்றின் தரம் ஆகியவற்றின் வெளிப்பாடு நோய் எதிர்ப்பு சக்தியையும் பலவீனப்படுத்துகிறது. இதனால், நோய்த் தொற்றுகளை எதிர்த்து போராடுவது உடலுக்கு கடினமாகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: Weight loss tips: உடல் எடை குறைப்பு; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில எளிய ரகசியங்கள்!
பருவகால நோய்களின் தற்போதைய பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள மருத்துவ வல்லுநர்கள் சில எளிய வழிமுறைகளை பின்பற்ற பரிந்துரைக்கின்றனர். அதன்படி முதலில் வானிலைக்கு ஏற்ப ஆடை அணிய வேண்டும். இதமான, வசதியான ஆடைகளை அணிவது அசௌகரியங்களை தடுக்க உதவும். குளிர் அதிகரிக்கும் போது அதற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ளலாம்.
சூடான சூப்கள் மற்றும் மூலிகைத் தேநீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை பராமரிக்கலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய உணவு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உங்களுக்கு நாள்பட்ட சுவாச பிரச்சனைகள் இருந்தால், இதன் அறிகுறிகள் ஓரிரு நாட்களுக்கு மேல் நீடிக்கும்பட்சத்தில் கட்டாயம் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
வைரஸ் பரவலை தடுக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், முகக்கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இவற்றை பின்பற்றுவதன் மூலம் நோய்த் தொற்று அபாயங்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com