நடிகை லட்சுமி மேனன். தனது வசீகரமான பார்வையால் சினிமா ரசிகர்களை பல ஆண்டுகளாய் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த நடிகை என்றே கூறலாம். பல இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்த லட்சுமி மேனன் குடும்பம், கல்வி, சினிமா துறையில் என்னென்ன செய்தார்? தற்போது என்ன செய்கிறார்? என்பது குறித்த தகவல்களை இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: aishwarya rajesh : கதையின் நாயகி.. ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றி பயணம்!
ராமகிருஷ்ணன் - உஷா மேனன் தம்பதியினருக்கு 1996 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி பிறந்தார் லட்சுமி மேன். இவருடைய தாய் மற்றும் தந்தை இருவருமே கலைத்துறையில் இருந்து வந்ததால் சிறு வயதில் இருந்தே நடனம், நடிப்பு போன்றவற்றில் ஆர்வமாக இருந்திருக்கிறார். தன்னுடைய பள்ளிப்படிப்பை கொச்சியில் படித்த இவர், உயர் கல்வியை பெங்களூரில் உள்ள ரேவா பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.தந்தை மற்றும் தாயின் கற்றுக்கொண்ட கலையால் கடந்த 2011 ஆம் ஆண்டிலே மலையாளத்தில் ரகுவின்டே ஸ்வந்தம் ரசியா திரைப்படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார்.
தன்னுடைய 16 வயதில் அதாவது 2012 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் லட்சுமி மேனன்.
ஆனால் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த கும்கி வெளியானது. வசீகரமான கண், மலைவாழ் பெண்கள் உடுத்தும் ஆடையில் தோன்று தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்தார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொடுத்ததையடுத்து பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.
பாண்டிய நாடு, குட்டிப்புலி, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், கொம்பன், வேதாளம், ஜிகர்தண்டா போன்ற பல திரைப்படங்களில் நடித்தன் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார். ஆனாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பட வாய்ப்புகள் சரியாக வரவில்லை. இதனால் கொஞ்ச நாள்கள் தமிழ் சினிமாத் துறையில் இவர் தலை தென்படவில்லை. இதையடுத்து ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான சந்திரமுகியாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். எதிர்பாரதார வெற்றி இல்லையென்றாலும் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் வர தொடங்கியது.
முதல் படம் முதல் தமிழ் சினிமாவில் நடித்த பெரும்பாலான திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவருடைய திறமைகக்காக தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், சிறந்த நடிகைகக்கா தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், ஆனந்த விகடன் மற்றும் சென்னை டைம்ஸ் இணைந்து நம்பிக்கைக்குரிய பெண் புதுமுகம் என்ற விருதையும் வழங்கியுள்ளனர்.
மேலும் படிக்க: Coolie ott release: ரஜினிகாந்த் - லோகேஷ் கூட்டணியில் வெளியான கூலி; எந்த ஓடிடியில் எப்போது பார்க்கலாம்?
நடிகை லட்சுமி மேனனுக்கு இதுவரை திருமணமாகாதவர். தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் விஷாலுடன் நடந்த தவறான திருமண வதந்தி ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நான் சிறு வயதில் ஒருவரை காதலித்தேன் எனவும், சினிமாவிற்குள் வந்ததால் அப்படியே போய்விட்டது என்று அவருக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப கட்டத்தைப் போன்று அதிக சினிமா வாய்ப்பு வரவில்லையென்றாலும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னதாக எர்ணாகுளத்தில் உள்ள மதுபான பாரில் ஐடி ஊழியருக்கும் லட்சுமி மேனனுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஐடி ஊழியரை தன்னுடைய காரில் கடத்தி சென்று தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியானது. இந்த வழக்கில் லட்சுமி மேனனுடன் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சுமி மேனனையும் அழைத்து சென்று எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இவர் தற்போது தலைமாறிவாகியுள்ளார்.
Image credit - Instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com