தற்போதைய காலகட்டத்தில் கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் இளம்தலைமுறையினரிடம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுப்பதற்கு இயற்கையான வழிகளை பின்பற்றலாம் என்று கருதுபவர்கள் ஏராளமாக உள்ளனர்.
மேலும் படிக்க: பயோட்டின் குறைபாடா? கவலையே வேண்டாம், உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தும் சத்தான உணவுகள்
நம்முடைய வீடுகளில் பொதுவாக காணப்படும் ஒரு மூலிகை பொருள் என்றால் அது கொத்தமல்லி தான். சுவைக்காக உணவில் சேர்க்கப்படும் கொத்தமல்லிக்கு, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதிசய ஆற்றலும் உண்டு. கொத்தமல்லியில் வைட்டமின்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளன.
குறிப்பாக, கூந்தலின் வேர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வதை தடுக்கவும் கொத்தமல்லி பயன்படுகிறது. இது தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் பொடுகு போன்றவற்றை நீக்கி, தலைமுடியை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. கொத்தமல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் வளர்ச்சியை தூண்டுகின்றன. அதனடிப்படையில், கொத்தமல்லியை கொண்டு நமது தலைமுடியை எவ்வாறு ஆரோக்கியமாக பராமரிக்கலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? அரிசி தண்ணீரை இனி இப்படி யூஸ் பண்ணுங்க
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை இரவில் தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில், அந்தத் தண்ணீரை வடிகட்டி, இலைகளை மசித்து அதன் சாறை எடுக்கவும். இதன் பின்னர், ஷாம்பு போட்டு தலைக்கு குளித்த பிறகு, கடைசியாக இந்தக் கொத்தமல்லி தண்ணீரை கொண்டு முடியை அலசலாம். இது தவிர, இதை நேரடியாக தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு குளிர்ந்த நீரில் குளிக்கலாம். மேலும், கொத்தமல்லி தண்ணீரை தலையில் தடவும்போது, விரல்களால் மென்மையாக மசாஜ் செய்யவும். இப்படி செய்வதால், ரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
சிறந்த பலன்களை பெற, வாரத்திற்கு 2-3 முறை இதை பயன்படுத்தலாம். இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உங்கள் முடியின் அமைப்பிலும், வளர்ச்சியிலும் நல்ல முன்னேற்றத்தை காணலாம். கொத்தமல்லி இயற்கையானது என்பதால் இதில் இருந்து ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தயக்கம் கொள்ள தேவையில்லை.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com