herzindagi
new tamil movie release

New Movies Tamil : இந்த வாரம் வெளியாகியிருக்கும் தமிழ் படங்கள்

இந்த வாரம் வெளியாகியிருக்கும் தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். குடும்பத்துடன் கண்டுகளிக்க இந்த வாரம் 3 படங்கள் வெளியாகியுள்ளன. 
Editorial
Updated:- 2023-05-26, 17:43 IST

இந்த வாரம் ஓடிடியை காட்டிலும் 3 தமிழ் படங்கள் நேரடியாக தியேட்டரில் வெளியாகியுள்ளன. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் இந்த படங்கள் உள்ளதாக விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. வாருங்கள் என்னென்ன படங்கள் ரிலீஸ் என்பதை இப்போது பார்ப்போம்.

தீராக் காதல்

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் தீராக் காதல் படத்தைல் இயக்குனர் ரோகின் வெங்கடேஷன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே அதே கண்கள், பெட்டர்மாஸ் போன்ற படங்களை இயக்கியவர். படம் குறித்த விமர்சனங்கள் பாசிட்டிவாக வெளியாகியுள்ளனர். ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளன. ஃபீல் குட் மூவியாக இருப்பதால் குடும்பத்துடன் நிச்சயம் ஹியேட்டரில் சென்று பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்:சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவின் அடுத்த அறிவிப்பு! வாழ்த்தும் ரசிகர்கள்

theera kadhal

கழுவேத்தி மூர்க்கன்

ஹாரர் படங்களில் நடித்துக் கொண்டிருந்த அருள்நிதி வம்சம் படத்திற்கு பிறகு நடித்துள்ள கிராமத்து பிண்ணனி கொண்ட திரைப்படம். அரசியல் வசனம், ஜாதி அரசியல் என படத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டுள்லதாம். அருள்நிதியின் நடிப்புக்கும் வழக்கம் போல் பாராட்டுக்கள் குவிந்துள்ளன. இந்த படமும் தியேட்டரில் நேரடியாக வெளியாகியுள்ளது.

arulnidhi movie

காசேதான் கடவுளடா

யோகிபாபு மற்றும் மிர்ச்சி சிவா நடித்துள்ளகாசேதான் கடவுளடா திரைப்படம் நகைச்சுவை படமாக வெளியாகியுள்ளது. வயிறு வலிக்க சிரிக்கும் வகையில் படத்தில் பல காட்சிகள் உள்ளதாம். பல தடைகளுக்கும் பிறகு ஒருவழியாக இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com