நடிகர் சிம்பு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி தற்போது டாப் நடிகராக இருக்கிறார்.சிம்பு உடல் எடையை மெயிண்டெயின் செய்யாமல் மிகவும் குண்டான தோற்றத்தில் படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின்பு கொரோனா லாக்டவுனில் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார். எவ்வளவு கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தார் என்பதை வீடியோவாக யூடியூபில் பதிவிட்டார். ATMAN என்ற வார்த்தையையும் தனது பெயருடன் சேர்த்துக்கொண்டார். சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் STR48 படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் போட்டோஸ்
நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராமில் தற்போது ஆக்டிவாக இருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாவில் 12 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். லேட்டஸ்டாக சிம்பு பதிவிட்ட புகைப்படத்தில் கருப்பு நிற ஹூடி மற்றும் பாண்ட் அணிந்திருக்கிறார்.
இந்த புகைப்படம் இதுவரை 1 லட்சத்திற்கும் லைக்ஸை பெற்று வருகிறது.
image: instagram
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation