herzindagi
image

தேசிங்கு ராஜா 2 விமர்சனம் : ஆண்டவா... தமிழ் சினிமா ரசிகர்களை ஏன் இப்படி சோதிக்கிறீங்க

எழில் இயக்கத்தில் விமல் நடித்து வெளிவந்துள்ள தேசிங்கு ராஜா 2 படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 2 நிமிடங்களில் இந்த பதிவை படித்து வாழ்வில் இரண்டு மணி நேரத்தை பயனுள்ளதாக மாற்றுங்கள்.
Editorial
Updated:- 2025-07-18, 09:28 IST

எழில் இயக்கத்தில் விமல் நடித்து ஜூலை 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த படம் தேசிங்கு ராஜா 2. பூஜிதா, சிங்கம் புலி, லொள்ளு சபா சுவாமிநாதன், மதுரை முத்து, புகழ், மதுமிதா, ரவி மரியா, மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தேசிங்கு ராஜா 2 படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 2013ல் வெளிவந்த தேசிங்கு ராஜா படத்தில் சூரியின் ஒரு படையே வந்தாலும் சமாளிப்பேன் மாமா, சிங்கம் புலியின் குறுக்க இந்த கெளஷிக் வந்தா காமெடி இன்றும் பல மீம்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தேசிங்கு ராஜா 2 படத்தில் அப்படியான காமெடி காட்சிகள் உள்ளதா ? படம் எப்படி இருக்கு வாருங்கள் பார்ப்போம்.

தேசிங்கு ராஜா 2 கதைச்சுருக்கம்

இரு காவலர்களுக்கு இடையிலான மோதல், அரசியல்வாதி - ரவுடி மோதல் என வித விதமாக தேசிங்கு ராஜா 2 கதை நிமிடத்திற்கு நிமிடம் மாறுகிறது. கதை என்று குறிப்பிட்டு சொல்வதற்கு படத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தேசிங்கு ராஜா 2 விமர்சனம்

சென்னையின் கிண்டி பகுதியில் காவல் அதிகாரிகளாக பணியாற்றும் விமல், லேடி கெட்டப் போட்ட புகழ் ஏன் எதற்கு என்று தெரியாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை சண்டை போடுகின்றனர். இதற்கு இடையில் அரசியல்வாதி - ரவுடி மோதல், அரசியல்வாதியின் அந்தரங்க படம் என கதை எங்கோ செல்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவை கலைஞர்களை போட்டு 2 மணி நேரத்திற்கு ரசிகர்களை சிரிக்க வைக்க கஷ்டப்பட்டுள்ளனர். கனத்த உள்ளம் கொண்ட நபர்களுக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிங்கு ராஜா 2 நெகட்டிவ்ஸ்

  • கதை, திரைக்கதை, வசனங்கள் மூன்றிலும் இயக்குநர் எழில் சொதப்பியுள்ளார். எப்படி இந்த படத்தை எடுத்து முடித்தார் என்றே கேள்வியே நமக்கு எழுகிறது.
  • காமெடி என்ற பெயரில் ஆரம்பம் முதல் இறுதிகாட்சி வரை கதாபாத்திரங்களின் நடிப்பு நமக்கு தலைவலியை கொடுக்கிறது.
  • லேடி கெட்டப் போட்ட புகழுக்கு யாராவது டப்பிங் கொடுத்திருக்கலாம். இறுதி காட்சி வரை தொண்டை கரகரப்பு வந்த மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்.
  • படத்தின் பாடல்கள், பின்னணி இசையை குறிப்பிட்டு பயனில்லை. ஏனெனில் வித்யாசாகர் எப்படி இந்த படத்தை பார்த்து இசையமைத்தார் என்ற வருத்தம் தொற்றிக் கொள்ளும்.

தேசிங்கு ராஜா 2 ரேட்டிங் - 0 / 5

எந்த நம்பிக்கையில் இப்படியான படங்களை எடுத்து ரிலீஸ் செய்து மக்களிடம் வசூலை அள்ளலாம் என நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. தயவு செய்து இப்படத்தை யாரும் பார்த்து உங்கள் வாழ்க்கையில் இரண்டு மணி நேரத்தை வீணடிக்காதீர்கள்.

மேலும் படிங்க  பீனிக்ஸ் விமர்சனம் : அடித்து துவைத்த கதையில் வில்லன்களை அடித்து துவைக்கும் சூர்யா சேதுபதி

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com