ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பறந்து போ. கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரயான், அஞ்சலி, விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் ராம் அவருடைய திரைப்பயணத்தில் இயக்கிய கற்றது தமிழ், தரமணி, பேரன்பு, தங்க மீன்கள் இவற்றில் கண்டிப்பாக ஒரு படம் நம் மனதிற்கு நெருக்கமாக இருக்கும். தற்போது வெளிவந்துள்ள பறந்து போ திரைப்படம் எப்படி இருக்கிறது ? வாருங்கள் பார்ப்போம்.
பெற்றோர் இருந்தும் கவனிப்பு இன்றி மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் குழந்தை வீட்டைவிட்டு வெளியே வந்த பிறகு இவ்வுலகில் எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ விரும்பும் என்பதே பறந்து போ படத்தின் கதை.
பறந்து போ படம் எல்லோருடைய வீட்டிலும் நடக்க கூடிய விஷயமே. இன்றைய காலச்சூழலில் பிள்ளையை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக அப்பாவும், அம்மா இருவருமே வேலைக்கு செல்கின்றனர். இதனால் குழந்தை கவனிப்பு இன்றி வளரும் சூழ்நிலை உண்டாகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் குழந்தை வீட்டை விட்டு வெளியே வந்தால் அதன் உலகம் எவ்வாறு மாறும் என்பதை இயக்குநர் ராம் சொல்லி இருக்கிறார்.
மேலும் படிங்க பீனிக்ஸ் விமர்சனம் : அடித்து துவைத்த கதையில் வில்லன்களை அடித்து துவைக்கும் சூர்யா சேதுபதி
படத்தில் குழந்தையை அடித்து வளர்க்காமல் செல்லம் மட்டுமே கொடுத்து வளர்ப்பதாக தோன்றினாலும் உரிய நேரத்தில் குழந்தையை கவனிக்காமல் விடுவது நம் தவறு என்பதையும் இயக்குநர் ராம் பெற்றோர்களுக்கு உணர்த்திவிடுகிறார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com