herzindagi
image

பீனிக்ஸ் விமர்சனம் : அடித்து துவைத்த கதையில் வில்லன்களை அடித்து துவைக்கும் சூர்யா சேதுபதி

அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். அறிமுக நாயகன் சூர்யா சேதுபதி மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Editorial
Updated:- 2025-07-12, 20:15 IST

அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி நடிப்பில் ஜூலை 4ஆம் தேதி பீனிக்ஸ் திரைப்படம் வெளியாகியது. தேவதர்ஷினி, வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், திலீபன், அஜய் கோஷ், அபி நக்ஷத்ரா, ஹரி உத்தமன், ஆடுகளம் நரேன், காக்கா முட்டை விக்னேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக சூர்யா சேதுபதி கிட்டதட்ட ஒன்றரை வருடத்தில் 50 கிலோவுக்கு மேல் எடை குறைத்து சிக்ஸ் ஃபேக் வைத்து நடித்துள்ளார். வாருங்கள் படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

பீனிக்ஸ் கதைச்சுருக்கம்

ஆர்.கே.புரம் எம்.எல்.ஏவை சூர்யா சேதுபதி பட்டப்பகலில் வெட்டிக் கொல்கிறார். ஜெயிலுக்கு சென்ற சூர்யா சேதுபதியை எம்.எல்.ஏவின் குடும்பத்தினர் தீர்த்து கட்ட வண்டி வண்டியாக ஆட்களை அனுப்புகின்றனர். சூர்யா சேதுபதியை ஏன் கொலை செய்ய முயற்சிக்கின்றனர் ? சூர்யா குடும்பத்திற்கும் எம்.எல்.ஏ குடும்பத்திற்கும் என்ன பகை ? சூர்யா சேதுபதி தாக்குதல்களை சமாளித்தாரா என்பதே இப்படத்தின் கதை.

பீனிக்ஸ் விமர்சனம்

ஆர்.கே.புரம் எம்.எல்.ஏவை கொலை செய்த சூர்யா சேதுபதி கூர்நோக்கு சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை கொலை செய்ய உள்ளூர் புள்ளிங்கோ முதல் பேன் இந்தியா புள்ளிங்கோ அனுப்பியும் எந்த பயனுமில்லை. யாராக இருந்தாலும் சூர்யா சேதுபதி துவம்ஸம் செய்துவிடுகிறார். வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரி ஹரி உத்தமனும் சூர்யா சேதுபதி பின்னணியை தெரிந்து அதிர்ந்து போகிறார். வழக்கமான பழிவாங்கும் கதையை எம்.எம்.ஏ சண்டையுடன் சேர்த்து 1 மணி நேரம் 50 நிமிட படமாக எடுத்துள்ளனர். 

பீனிக்ஸ் படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • காக்கா முட்டை விக்னேஷ், அபி நக்ஷத்ரா, தேவதர்ஷின் நன்றாக நடித்துள்ளனர். சூர்யா சேதுபதி சண்டை காட்சிகள் மாஸ் நடிகர் போல் மிரட்டுகிறார்.
  • முதல் பாதியை படத்தின் இரண்டாம் பாதி நன்றாக எடுக்கப்பட்டு இருந்தது.
  • எம்.எம்.ஏ சாம்பியன்ஷிப் போட்டியை சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தனர்.

மேலும் படிங்க  உப்பு கப்புரம்பு விமர்சனம் : காரம் இருந்தும் உப்பு சப்பில்லாத கீர்த்தி சுரேஷ் படம்

பீனிக்ஸ் படத்தின் நெகட்டிவ்ஸ்

  • எம்.எல்.ஏ கொல்லப்பட்டதன் பின்னணி வழக்கமாக பல படங்களில் பார்த்த விஷயமே.
  • வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம் சண்டைக்கோழி 2 படத்தை நினைவூட்டுகிறது. 
  • தொடக்கத்தில் எம்.எல்.ஏவும் சூர்யா சேதுபதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என காவல் அதிகாரியே சொல்கிறார். இது காட்சி பிழையா என தெரியவில்லை.
  • சாம் சி.எஸ் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கவில்லை.

கிளைமேக்ஸ் காட்சியில் சூர்யா சேதுபதி வெற்றி தோல்வி பற்றி ஒரு விஷயம் பேசுகிறார். பல கொலைகளை செய்துவிட்டு வெளியே வந்தால் அரசுவேலை கிடைக்குமென யாரோ தவறாக சொல்லிவிட்டார்கள் போல. 

பீனிக்ஸ் படத்தின் ரேட்டிங் - 2.25 / 5

முதல் பாதியை சிறப்பாக எடுத்திருந்தால் அறிமுக நாயகன் சூர்யா சேதுபதிக்கு இது வெற்றிப் படமாக அமைந்திருக்கும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com