herzindagi
image

பன் பட்டர் ஜாம் விமர்சனம் : ஹீரோவாக சாதித்தாரா ராஜு ஜெயமோகன் ?

ராகவ் மிர்தாத் இயக்கத்தில் ராஜு ஜெயமோகன் நடித்து வெளிவந்துள்ள பன் பட்டர் ஜாம் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். பிடித்ததை விட கிடைத்ததை வைத்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் என சொல்லும் மற்றொரு தமிழ் படம்.
Editorial
Updated:- 2025-07-24, 12:51 IST

ராகவ் மிர்தாத் இயக்கத்தில் ராஜு ஜெயமோகன் நடிப்பில் ஜூலை 18ஆம் தேதி திரையங்குகளில் வெளிவந்த படம் பன் பட்டர் ஜாம். சார்லி, ஆத்யா பிரசாத், பாவ்யா, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா பன் பட்டர் ஜாம் படத்திற்கு இசையமைத்துள்ளார். வாருங்கள் படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

பன் பட்டர் ஜாம் கதைச் சுருக்கம் 

தேவதர்ஷினி, சரண்யா இருவரும் தங்கள் பிள்ளைகளை ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்ய வைக்க முயற்சிக்கின்றனர். இருவரின் முயற்சி வெற்றி பெற்றதா ? இல்லையா என்பதே பன் பட்டர் ஜாம். 

பன் பட்டர் ஜாம் விமர்சனம்

பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைத்து தர வேண்டுமென தேவதர்ஷினியும், சரண்யா பொன்வண்ணனும் நினைத்து ராஜு - ஆத்யாவை காதலிக்க வைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் ராஜு, ஆத்யா இருவரும் வேறு நபர்களை காதலிக்கின்றனர். திடீரென இருவரின் காதல் வாழ்க்கையிலும் இடி விழுகிறது. அதன் பிறகு ராஜு, ஆத்யா என்ன முடிவெடுத்தனர் ? சேர்ந்தனரா ? இல்லையா என்பதை 2.20 மணி நேர படமாக எடுத்துள்ளனர். 

பன் பட்டர் ஜாம் படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • ராஜு ஜெயமோகன் தனது முந்தைய படங்களை விட காமெடி, காதல், சண்டை என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு மற்றொரு ஹீரோ கிடைத்திருக்கிறார்.
  • சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்றாக நடித்திருக்கின்றனர்.
  • ஆத்யா பிரசாத் அழகிலும், பாவ்யா மாடர்ன் பெண்ணாகவும் வசீகரிக்கிறார். பன் பட்டர் ஜாம் படத்திற்கு பிறகு இருவருக்கும் நிறைய வாய்ப்புகள் குவிய போகிறது.
  • நிவாஸ் பிரசன்னாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம். படத்திற்கு தேவையான உயிரோட்டத்தை அளிக்கிறது. 
  • பல படங்களில் பார்த்த காதல் கதை என்றாலும் கலகலப்பாக கதை நகர்கிறது.
  • விக்ராந்தின் கேமியோ ரோலும் படத்திற்கு தேவையான செருகலே. 
  • ராஜுவின் ஒன் லைன் டைமிங் வசனங்கள், விஜய் டிவி பப்புவின் கலாட்டாவுக்கு திரையரங்கில் சிரிப்பலை. 

பன் பட்டர் ஜாம் படத்தின் நெகட்டிவ்ஸ்

  • பொழுதுபோக்கு படத்தில் லாஜிக் பார்க்க தேவையில்லை என்றாலும் நண்பனிடம் காதலியை மறைப்பது, காதலிக்காக நண்பனை விட்டுக் கொடுப்பது, நண்பனின் காதலி என தெரிந்தும் மோக செயல்களில் ஈடுபடுவது தவறாக தெரிந்தது. 
  • தைரியம் இல்லாத ஆண் பெண்ணை காதலித்து பிறகு பயத்தில் விலகிச் செல்வதெல்லாம் அரைச்சு அரைச்சு புளித்து போன மாவு.
  • இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பணம் சம்பாதிப்பதை அரசு உத்தியோகம் போல் காண்பிப்பதும் அதை காதலன் புரிந்து கொள்ளவில்லை என மற்றொருவனை காதலிப்பதும் துளியும் பொருந்தவில்லை.
  • படத்தில் ஹீரோ, இரண்டு ஹீரோயின்களும் வேலைக்கு செல்லும் வயதில் தெரிகின்றனர். ஆனால் முதலாம் ஆண்டு படிப்பதாக காட்டுகின்றனர். பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்க பா...
  • பன் பட்டர் ஜாமிற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் ரொம்ப சுமார். 

மேலும் படிங்க  குட் வைஃப் விமர்சனம் : நடிகை ரேவதி இயக்கிய கோர்ட் ரூம் டிராமா எப்படி இருக்கு ?

பன் பட்டர் ஜாம் ரேட்டிங் - 3.25 / 5

படத்தில் ஹீரோ நல்ல வேலையாக முதலாம் ஆண்டே திருந்துவிடுகிறார். கல்லூரி மாணவர்கள், காதல் ஜோடிகளுக்கு இது கண்டிப்பாக ஜாலியான பொழுதுபோக்கு படம்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com