காளியின் வெறியாட்டம் 7 நாளில் ரூ 52 கோடி, கூலி அப்டேட், தெலுங்கு படத்தில் கார்த்தி... பரபரப்பான கோலிவுட்

முதல் நாளில் பின்னடைவை சந்தித்தாலும் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் 52 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கூலி படத்தின் முக்கியமான அப்டேட் எப்ரல் 4ஆம் தேதி வெளியாகிறது. இன்று நள்ளிரவு முதல் மாதவனின் டெஸ்ட் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
image

கோடை விடுமுறை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் திரையுலகம் அடுத்தடுத்த படங்களின் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த வாரம் இதே நேரத்தில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும். கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தொடர்ச்சியாக அப்டேட்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. சுந்தர். சி, வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ள கேஞ்சர்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் 60 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

வீர தீர சூரன் வசூல்

சித்தா அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த வீர தீர சூரன் திரைப்படம் முதல் நாளில் நீதிமன்ற தடையினால் தொய்வை சந்தித்திருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் வசூலை இரட்டிப்பாக்கியுள்ளது.7 நாட்களில் உலகளவில் 52 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக வீர தீர சூரன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கூலி அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சுருதி ஹாசன், பூஜா ஹெக்டே, சத்யராஜ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள கூலி படத்தின் முக்கிய அப்டேட் ஏப்ரல் 4ஆம் தேதி வருகிறது. சூட்டிங் நிறைவடைந்துவிட்ட நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

HIT 3 : கார்த்தி கேமியோ

தெலுங்கில் நானி நடித்து மே 1ஆம் தேதி வெளியாகவுள்ள HIT 3 பாகத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கூடுதலாக HIT 4ல் கார்த்தியின் கதாபாத்திரம் முதன்மையாக இருக்கும் என கூறப்படுகிறது.

மாதவனின் டெஸ்ட் ரிலீஸ்

சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் இன்று நள்ளிரவு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திரையரங்க வெளியீட்டை தவிர்த்து நேரடியாக ஓடிடி தளத்தில் டெஸ்ட் திரைப்படம் வெளியாகிறது.

குட் பேட் அக்லி ட்ரெய்லர்

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். ஏனெனில் உலகெங்கும் முன்பதிவு 8.02 மணிக்கு தொடங்கும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெட் டிராகன் லுக்கில் அஜித்தின் சில போஸ்டர்களும் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் படிங்கசர்தார் 2 முதல் எம்புரான் வசூல் வரை; இந்த வார சினிமா அப்டேட்ஸ்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP