
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக 10 - 15 வருடங்களுக்கு முன்பு வெளியான முன்னணி ஹீரோக்கள் நடித்த தமிழ் திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரீரிலீஸ் கலாச்சாரம் தியேட்டர்களில் வசூல் ரீதியாக சாதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் சமீப காலமாக திரையரங்குகளில் வெளியாகும் புதிய படங்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பொதுவாக வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவது வழக்கம். சனி மற்றும் ஞாயிறு பலருக்கும் ஒய்வு நாள் என்பதால் தியேட்டர் வசூல் அதிகம் இருக்கும். ஆனால் தற்போது பழைய தமிழ் படங்கள் ரீரிலீஸ் செய்யப்படுவதால் மக்கள் அவர்களுக்கு பிடித்த பழைய படங்களை தான் பார்க்க விரும்புகிறார்கள். இதனால் சென்னையில் பல பிரபல தியேட்டர்களும் தமிழ் படங்களை ரீரிலீஸ் செய்ய துவங்கியுள்ளனர்.
மேலும் படிக்க: பருத்திவீரன் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவு! ரசிகர்கள் கொண்டாட்டம்
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகை திரிஷா நடிப்பில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் சென்னையில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. 2001 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இன்றும் சில தியேட்டர்களில் ஹவுஸ்புல் கட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் வசூல் வெற்றிக்கு பின்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3, மயக்கம் என்ன, வி.ஐ.பி, யாரடி நீ மோகினி போன்ற படங்களும் ரீரிலீஸ் செய்யப்பட்டு வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித் என பல முன்னணி தமிழ் ஹீரோக்களின் பழைய படங்கள் தற்போது திரையில் ரீரிலீஸ் ஆகி வருகிறது. இந்த படங்களை தியேட்டர்களில் மீண்டும் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை பிரபல முன்னணி தமிழ் நடிகர்களின் படங்கள் எதுவும் தியேட்டரில் வெளியாகாத நிலையில் பல திரையரங்குகளும் தற்போது இந்த ரீரிலீஸ் கலாச்சாரத்தை துவங்கியுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை, நடிகர் விஜய் நடித்துள்ள காதலுக்கு மரியாதை, திருமலை, நடிகர் அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன், வாலி, பில்லா, நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி, கோ, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்கள் இந்த மாதம் தியேட்டர்களில் ரீரிலீஸ் ஆகியுள்ளது. இந்தத் திரைப்படங்களை ரசிகர்கள் பலமுறை டிவியில் பார்த்தாலும் தியேட்டர்களில் வந்து மீண்டும் காண அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு மலையாள பிரபல நடிகர் நிவின் பால், நடிகை சாய் பல்லவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படமும் தமிழகத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டு தற்போது வசூல் சாதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், நடிகை திரிஷா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் கில்லி வரும் ஏப்ரல் 17ஆம் தேதி தமிழகத்தில் ரீரிலீஸ் ஆகவுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீஸ் ஆகும் கில்லி திரைப்படத்தை காண விஜய் ரசிகர்கள் பலரும் பேர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
